Category Archives: திருமால் ஆலயங்கள்
அருள்மிகு தெய்வநாயகப்பெருமாள் திருக்கோயில், திருநாங்கூர்
அருள்மிகு தெய்வநாயகப்பெருமாள் திருக்கோயில், திருநாங்கூர்-609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364-266 542 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தெய்வநாயகப்பெருமாள் |
உற்சவர் | – | மாதவப்பெருமாள் |
தாயார் | – | கடல் மகள் நாச்சியார் |
தீர்த்தம் | – | சோபன, தேவசபா புஷ்கரிணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | கீழச்சாலை |
ஊர் | – | திருத்தேவனார்த்தொகை, (திருநாங்கூர்) |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
துர்வாச முனிவர், வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், “பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும்” என்று சாபம் கொடுத்தார்.
அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். துர்வாசரும், “இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப்பொருள்களை அவமதிக்ககூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்” என கூறிச் சென்று விட்டார்.
அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர்
அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர்-609 808, மயிலாடுதுறை தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364-237 952 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தேவாதிராஜன், ஆமருவியப்பன் |
உற்சவர் | – | ஆமருவியப்பன் |
தாயார் | – | செங்கமலவல்லி |
தீர்த்தம் | – | தர்சன புஷ்கரிணி, காவிரி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருவழுந்தூர் |
ஊர் | – | தேரழுந்தூர் |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு முறை பெருமாளும் சிவனும் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தாள். காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்கு சாதகமாக கூற, சிவனுக்கு கோபம் வந்து பசுவாக மாறும் படி சாபமிட்டார். பார்வதி பசுவாக மாறியவுடன், துணைக்கு சரஸ்வதியும், லட்சுமியும் பசுவாக மாறி, பூமிக்கு வந்தார்கள். இவர்களை மேய்ப்பவராக, பெருமாள் “ஆ“மருவியப்பன் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் ஆட்சிசெய்கிறார்.
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இங்கு மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார். கிழக்கு பார்த்து அமைந்த இந்த கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது. அங்கு தான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் இத்தலத்தில் தான் பிறந்தார்.