Category Archives: 108 திவ்விய தேசங்கள்
அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி
அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி (திருப்பேர் நகர்) – 613105 தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 4362 – 281 488, 281 460, 281 304 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அப்பக்குடத்தான் |
உற்சவர் | – | அப்பால ரங்கநாதர் |
தாயார் | – | இந்திரா தேவி, கமலவல்லி |
தல விருட்சம் | – | புரச மரம் |
தீர்த்தம் | – | இந்திர புஷ்கரணி |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருப்பேர் |
ஊர் | – | கோவிலடி |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தரவேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு துர்வாச முனிவர்,”மன்னா. பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்” என்றார்.
இதன்படி மன்னன் கோயிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது. ஒரு நாள் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், திருஆதனூர்
அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், திருஆதனூர் – 612 301. பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435 – 2000 503 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆண்டளக்கும் ஐயன் |
உற்சவர் | – | ஸ்ரீரங்கநாதர் |
தாயார் | – | பார்க்கவி |
தல விருட்சம் | – | புன்னை, பாடலி |
தீர்த்தம் | – | சூர்ய, சந்திர தீர்த்தம் |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | ஆதனூர் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையைத் தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூவுலகில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படி சபித்தார்.
தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண் டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி “நான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளைத் திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்” என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.