Category Archives: 108 திவ்விய தேசங்கள்
அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி
அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி – 623 532 ராமநாதபுரம் மாவட்டம். +91-4567- 254 527 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 .30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன்), கல்யாண ஜகநாதர் |
உற்சவர் | – | கல்யாண ஜெகந்நாதர் |
தாயார் | – | கல்யாணவல்லி, பத்மாசனி |
தல விருட்சம் | – | அரசமரம் |
தீர்த்தம் | – | ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருப்புல்லணை |
ஊர் | – | திருப்புல்லாணி |
மாவட்டம் | – | ராமநாதபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
72 சதுர் யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய(தற்போது கோயில் அமைந்துள்ள இடமான) திருப்புல்லாணி காட்டில், பெருமாளைவேண்டிக் கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அகமகிழ்ந்த பெருமாள் அரச மரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார். அதைக் கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்டினர். உடனே மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று ஆதிஜெகநாத பெருமாளாகக் காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம்.
பிற்காலத்தில் தாயார் பத்மாசினிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார்.
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்– 622 507 புதுக்கோட்டை மாவட்டம்
+91-4322 -221084, 99407 66340 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சத்தியமூர்த்தி |
உற்சவர் | – | அழகியமெய்யர் |
தாயார் | – | உஜ்ஜீவனதாயார் |
தல விருட்சம் | – | ஆல மரம் |
தீர்த்தம் | – | சத்ய புஷ்கரணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருமய்யம் |
ஊர் | – | திருமயம் |
மாவட்டம் | – | புதுக்கோட்டை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தல வரலாற்றினையே கருவறையில் சிற்பங்களாக வடித்திருக்கும் கோயில் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில். ஒருசமயம் மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் பெருமாள் பாம்பணையில் படுத்து யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர். அது கண்டு அஞ்சி, பூதேவி பெருமாளின் திருவடிக்கருகிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்து கொள்கின்றனர்.