Category Archives: 108 திவ்விய தேசங்கள்
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்– 689 101 (ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்) பந்தனம் திட்டா மாவட்டம், கேரளா மாநிலம்.
+91- 469 – 270 0191(மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்) |
தாயார் | – | செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் (வாத்சல்ய தேவி) |
தீர்த்தம் | – | கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | ஸ்ரீவல்லப க்ஷேத்திரம் |
ஊர் | – | திருவல்லவாழ் (ஸ்ரீவல்லப க்ஷேத்திரம்) |
மாவட்டம் | – | பத்தனம் திட்டா |
மாநிலம் | – | கேரளா |
கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து இந்தக் கோயிலுக்கு வருவார். மறுநாள் துவதாசியன்று இந்தக் கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன், இந்த அம்மையாரைக் கோயிலுக்கு செல்லவிடாமல், மறைவாக இருந்து, அவருக்குத் தெரியாமல், துன்பம் விளைவித்தான். இதைப் பெருமாளிடம் அம்மையார் முறையிட்டார்.
அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா (திருவாறன்விளை)
அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா (திருவாறன்விளை) – 689 533, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா மாநிலம்.
+91- 468 – 221 2170 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருக்குறளப்பன் (பார்த்தசாரதி) |
தாயார் | – | பத்மாசனி |
தீர்த்தம் | – | வியாச தீர்த்தம், தேவபுஷ்கரிணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | ஆரமுளா |
ஊர் | – | திருவாறன் விளை |
மாவட்டம் | – | பத்தனம் திட்டா |
மாநிலம் | – | கேரளா |
பாரதப்போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியினுள் பதிந்து விட்டது. அதனைத்தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்தான் கர்ணன். அந்த நேரத்தில் அர்ஜுனன் கர்ணன் மீது அம்பெய்ததால் இறந்து போனான். இவ்வாறு ஆயுதம் ஏதும் இல்லாமல் இருந்த கர்ணனை கொன்றது அர்ஜுனனுக்கு நியாயமாகப் படவில்லை.