Category Archives: 108 திவ்விய தேசங்கள்
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம் – 612 001 தஞ்சாவூர் மாவட்டம்.
+91-435 – 243 0349, 94435 – 24529 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாரங்கபாணி, ஆராவமுதன் |
தாயார் | – | கோமளவல்லி |
தீர்த்தம் | – | ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருக்குடந்தை |
ஊர் | – | கும்பகோணம் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தைச் சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. “உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற ஆணின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே” எனக் கோபப்பட்ட இலட்சுமி, கணவரைப் பிரிந்தாள்.
தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், “அம்மா. கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும்” என்றார்.
அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை
அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை– 612605 தஞ்சாவூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாரநாதன் |
தாயார் | – | சாரநாயகி – பஞ்சலெட்சுமி |
தீர்த்தம் | – | சார புஷ்கரிணி |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருச்சாரம் |
ஊர் | – | திருச்சேறை |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்துக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம்,”அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும்” எனக் கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். “தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது” என காவிரி கூறியவுடன், கருடவ வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, “வேண்டும் வரம் கேள்” என்றார். அதற்கு காவிரி,”தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்” என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.