Category Archives: 108 திவ்விய தேசங்கள்
அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்
அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்-602 001 திருவள்ளூர் மாவட்டம்.
+91-44-2766 0378, 97894 19330 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | எவ்வுள்கிடந்தான் (வீரராகவப் பெருமாள்) |
உற்சவர் | – | வைத்திய வீரராகவர் |
தாயார் | – | கனகவல்லி |
தீர்த்தம் | – | ஹிருதாபதணி |
ஆகமம் | – | பாஞ்சராத்திரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | எவ்வுளூர் |
ஊர் | – | திருவள்ளூர் |
மாவட்டம் | – | திருவள்ளூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார். தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு ஆகாரத்துக்காக மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார். வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார். கிழவரும் புசித்துப் பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார். முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் ஒரு வருடம் திரும்பவும் தபம் செய்தார். ஒரு வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க, அதேபோல் அதே கிழவர் வந்து மாவு கேட்க, முனிவரும் தந்தார். பிறகு படுத்துறங்க அந்த கிழவர் “எவ்வுள்” என்று வினவ, முனிவரும் தன் இடத்தையே காட்டி “இவ்விடம் படுத்துக் கொள்ளவும்” என்றார்.
அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம்
அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44-2744 3245 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஸ்தலசயனப்பெருமாள் |
உற்சவர் | – | உலகுய்ய நின்றான் |
தாயார் | – | நிலமங்கைத் தாயார் |
தல விருட்சம் | – | புன்னை மரம் |
தீர்த்தம் | – | புண்டரீக புஷ்கரணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருக்கடல் மல்லை |
ஊர் | – | மகாபலிபுரம் |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இன்றைய மாமல்லபுரம் கடற்கரைப்பகுதியில் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன. இதில் புண்டரீக மகரிஷி என்பவர் தவம் செய்து வந்தார். இவர் அருகிலுள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களைப் பறித்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்தார். பறித்த பூக்களைக் கூடையில் கொண்டு செல்லும் போது, குறுக்கே கடல் இருந்தது. பக்திபெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த, தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைக்க ஆரம்பித்தார்.