Category Archives: 108 திவ்விய தேசங்கள்
அருள்மிகு துவராகாநாதர் திருக்கோயில், துவாரகை
அருள்மிகு துவராகாநாதர் (துவாரகீஷ் கோயில் “ஜகத் மந்திர்“) திருக்கோயில், துவாரகை, ஜாம்நகர் – 361 335 குஜராத் மாநிலம்.
+91-2892 – 234 080 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | துவராகாநாதர்(துவாரகீஷ்) |
தாயார் | – | பாமா, ருக்மணி, ராதா |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | சுதாமபுரி |
ஊர் | – | துவாரகை |
மாவட்டம் | – | அகமதாபாத் |
மாநிலம் | – | குஜராத் |
ஜராசந்தன் கம்சனின் மைத்துனன். இவனது தங்கையைத்தான் கம்சன் திருமணம் செய்திருந்தான். கண்ணன் கம்சனைக் கொன்றதால், தங்கை பூவிழந்ததைப் பொறுக்காத ஜராசந்தன் கண்ணனைக் கொல்ல முயன்றான். ஆனால், அவன் படையை தோற்கடித்து அனைவரையும் கொன்ற கண்ணன், பிற்காலத்தில் நடக்கவிருந்த மகாபாரத யுத்தத்தைக் கணக்கில் கொண்டு ஜராசந்தனை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான். உயிர்தப்பிய ஜராசந்தன் கண்ணனைப் பழிவாங்க காத்திருந்தான். இவர்களைத் தவிர காலயவணன் என்ற மன்னனும் கண்ணனைக் கொல்ல திட்டம் வைத்திருந்தான். தன்னால் யாதவ குலத்துக்குத் தீங்கு வரக் கூடாது என்று எண்ணிய கண்ணன், தன் குலத்தாருடன் மதுராவில் இருந்து இடம் பெயர்ந்து, சவுராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிக்கு வந்து விட்டார். அங்கே அவர்களுக்கு விஸ்வகர்மா பாதுகாப்பான ஒரு நகரத்தை அமைத்துக் கொடுத்தார். கலையழகு மிக்க இந்நகரை கடலுக்கு நடுவே அமைக்க சமுத்திரராஜன் இடம் கொடுத்து உதவினான். 12 யோசனை பரப்புள்ள இடம் தரப்பட்டது. துவாரகையைத் தங்கத்தாலேயே இழைத்தார் விஸ்வகர்மா. இதனால் இது “தங்க நகரம்” எனப்பட்டது. கண்ணன் தனது அவதாரம் முடிந்து மரணமடையும் வேளையில், வேடன் ஒருவன் அவன் மீது அம்பெய்தான். அப்போது துவாரகை கடலில் மூழ்கி விட்டது. பின்னர், இப்போதுள்ள, புதிய துவாரகை அரபிக்கடலில் கட்ச் வளைகுடா பகுதியில் எழுந்தது.
அருள்மிகு அநந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம்
அருள்மிகு அநந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம் – 695001, கேரளா மாநிலம்.
+91-471-245 0233 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 4.15 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் – அனந்த பத்மநாபன்
தாயார் – ஸ்ரீஹரிலஷ்மி
தீர்த்தம் – மத்ஸ்ய, பத்ம, வராஹ தீர்த்தங்கள்
பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் – திருவனந்தபுரம்
மாவட்டம் – திருவனந்தபுரம்
மாநிலம் – கேரளா
வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், பூஜை பாத்திரங்களில் சிறுநீர்கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், “உண்ணீ. (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு” எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி, “பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத்தான் வரவேண்டும்” எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார்.