Category Archives: சிவ ஆலயங்கள்
சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில், திருத்துறையூர்
அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில், திருத்தளூர், திருத்துறையூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் மாவட்டம்.
+91- 4142 – 248 498, 94448 07393
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிஷ்டகுருநாதேஸ்வரர் (பசுபதீஸ்வரர்) | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | சிவலோகநாயகி (பூங்கோதை) | |
தல விருட்சம் | – | கொன்றை | |
தீர்த்தம் | – | சூர்யபுஷ்கரணி | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருத்தளூர் | |
ஊர் | – | திருத்துறையூர் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சுந்தரர் |
கயிலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் இலிங்கம் பிரதிஷ்டை செய்து சிவன் திருமணத்தை கண்டார். அவர் இத்தலம் வந்தபோது சிவனின் திருமணத்தை காண விரும்பி இலிங்கம், அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இருவரும் அவருக்கு மணக்கோலத்தில் காட்சி தந்தனர்.
இத்தலத்தில் அகத்தியர் சிவனை மேற்கு நோக்கியும், அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டாராம். அவளது திருமணம் வட திசையில் உள்ள கயிலாய மலையில் நடந்ததால் இவ்வாறு செய்தாராம். இதன் அடிப்படையில் அம்பாள் வாமதேவ முகமாக (வடக்கு பார்த்து) தனிச்சன்னதியில் இருக்கிறாள். அம்பாளை இக்கோலத்தில் காண்பது அபூர்வம்.
விருத்தகிரீஸ்வரர் கோயில், விருத்தாசலம்
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
+91- 4143-230 203
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | விருத்தகிரீசுவரர் (பழமலைநாதர், முதுகுந்தர்) | |
அம்மன் | – | விருத்தாம்பிகை (பாலாம்பிகை – இளைய நாயகி) | |
தல விருட்சம் | – | வன்னிமரம் | |
தீர்த்தம் | – | மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி தீர்த்தம், சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம் | |
ஆகமம் | – | காமிகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருமுதுகுன்றம் | |
ஊர் | – | விருத்தாச்சலம் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் |
“நமசிவாய” என்ற மந்திரத்திற்கு ஐந்தெழுத்து. இதுபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தீர்த்தம், கொடிமரம், நந்தி, கோபுரம், பிரகாரம், தேர் என எல்லாமே ஐந்து தான்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம் “பழமலை” என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் “விருத்தாசலம்” என்ற சொல்லால் அழைக்கப்பட்டது. “விருத்தம்” என்றால் “பழமை.” “அசலம்” என்றால் “மலை.” காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை. தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.
இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்ததாம். விபசித்து முனிவர் முத்தா நதியில் நீராடி, இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று, திருப்பணி செய்யும் பேறு பெற்றார். இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்கினார். அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்பது வாய்வழிக்கதை. இந்த வன்னிமரம் 1700 ஆண்டுகளுக்கு முன்பானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒருமுறை, சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய, பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலம் வரும் போது இறைவன் சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னைத் தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் கள்வருக்கு பயந்து, இந்த பொன் அனைத்தையும் இங்குள்ள மணிமுத்தார்று நதியில் போட்டு விட்டு இறைவனின் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார். இதை அடிப்படையாகக் கொண்டே, “ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது போல்” என்ற பழமொழி தோன்றியது.