Category Archives: சக்தி ஆலயங்கள்
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், பெருமாநல்லூர்
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், பெருமாநல்லூர்-641 666, கோயம்புத்தூர் மாவட்டம்.
*********************************************************************************************************
+91 – 421 235 0544, 235 0522 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – கொண்டத்துக்காளியம்மன் (குண்டத்தம்மன்)
உற்சவர்: – கொண்டத்துக்காளியம்மன்
தல விருட்சம்: – வேப்பமரம்
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – பெரும்பழனம்
ஊர்: – பெருமாநல்லூர்
மாநிலம்: – தமிழ்நாடு
இப்பகுதியை சேரமன்னர்கள் ஆண்டபோது, போரில் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குருநாதரிடம் ஆலோசனை கேட்டனர்.
அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய குருநாதர், போரில் வெல்ல படைபலம் மட்டுமின்றி காளியின் அருள்பலமும் வேண்டும் எனக்கூறி, அவளுக்கு கோயில் அமைத்து களப்பலி கொடுத்துப் போருக்குச் சென்றால் எளிதில் வெல்லலாம் என்றார்.
அதன்படி மன்னர்கள் இவ்விடத்தில் காளிதேவிக்கு தனியே கோயில் ஒன்றைக் கட்டினர். பின்பு அண்டை நாடுகள் மீது படையெடுத்துச் செல்லும் முன்பு காளியை வணங்கி பெரிய குண்டம் ஒன்றில் வேள்வி வளர்த்து அதில் வீரர் ஒருவரை பலி கொடுத்து விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில், பாரியூர்
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில், பாரியூர் – 638 452, ஈரோடு மாவட்டம்.
****************************************************************************************************
+91-4285-222 010 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
மூலவர்: – காளியம்மன்(கொண்டத்துக்காரி)
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன் இருக்கலாம்
புராணப் பெயர்: – அழகாபுரி, பராபுரி
ஊர்: – பாரியூர்
மாநிலம்: – தமிழ்நாடு
பாரியூரில் இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோயில் எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் கிடையாது.
இக்கோயில் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சரித்திரப்புகழ் பெற்ற கோயிலாக இருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த கோயில் பின்பு அப்பகுதி மக்களால் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.
1000 ஆண்டுகள் பழமையான கோயில் இது. இக்கோயிலில் சூரராச் சித்தர் என்பவர் மந்திர சக்தி படைத்தவராக இருந்துள்ளார். மந்திரசக்தியினால் அவருக்கு அன்னை காட்சி தந்ததாகக் கூறப்படுகிறது. சுற்றிலும் பச்சைபசேல் என வயல் வெளிகள் சூழ, மனதுக்கு அமைதி தரும் வகையிலான சுற்று சூழலோடு அமைந்திருக்கிறது.
அம்பாள் கீழ் உள்ள பீடம் 7 பீடமாக அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்மன் உருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் சிறப்பாகும். இது 40 அடி நீளம் கொண்டது. அம்மன் சிரசில் உருத்ரன் உள்ளார். முடி சுவாலா முடி (நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போல் இருக்கும்) தாங்கி உருத்ரகாளியாக அமைந்துள்ளார். உருத்ரனின் முகம் அம்மனின் சிரசில் அமைக்கப்பட்டுள்ளது.