Category Archives: சக்தி ஆலயங்கள்
அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்
அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்.
*****************************************************************
+91- 0421 – 247 2200, 2484141 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – கோட்டை மாரியம்மன் (கோடீஸ்வரி மாரி)
தல விருட்சம்: – வேம்பு
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – திருப்போர்
ஊர்: – திருப்பூர்
மாநிலம்: – தமிழ்நாடு
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயி ஒருவர், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டவராக இருந்தார். பசு வளர்க்கும் தொழில் செய்து வந்த அவர், தனது பயன்பாட்டிற்குப் போக, மீதிப் பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார். ஒருசமயம், அவர் வளர்த்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து பால் கறக்கவில்லை.
சந்தேகமடைந்த விவசாயி பசுவிடமிருந்து யாரோ பாலைத் திருடுவதாக எண்ணி அதனைக் கண் காணித்தார். அப்போது பசுக்கூட்டத்தில் இருந்து தனியே சென்ற அப்பசு, ஓரிடத்தில் தானாக பால் சுரந்தது. இதனைக்கண்டு வியப்படைந்த பக்தர், அருகில் சென்று பார்த்தார். அங்கு ஒரு ஜோதி தெரிந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய மாரியம்மன், பசு பால் சொரிந்த இடத்தில் தான் எழுந்தருளியிருப்பதாக கூறினாள்.
மறுநாள் அவர் நடந்ததை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் இணைந்து ஜோதி தோன்றிய இடத்தை ஆய்வு செய்தனர். அங்கே ஒரு அம்பாள் சிலை இருந்தது. அந்த சுயம்புவுக்கு (தானாகத் தோன்றியது) கோயில் கட்டினர்.
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம்
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம் மாவட்டம்.
*****************************************************************************
+91 427 2267 845 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.
தல விருட்சம்: – அரச மரம்
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – சேலம்
மாநிலம்: – தமிழ்நாடு
தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோயில் இதுவாகத்தான் இருக்கும் . அம்மன் ஈசாணி மூலையை பார்த்தபடி உள்ளது. எவ்வளவு பெரிய பதவி உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி கும்பிடவேண்டும் என்பதற்காக இவ்வாறு இருப்பதாக கூறப்படுகிறது.
மற்ற அம்பாள் தலங்களில் மனித தலை இருப்பது போல் அல்லாமல் இந்த அம்மனின் காலடியில் தாமரை மொட்டு உள்ளது.
நைவேத்தியம்படைக்கப்படுவதில்லை. மாறாக இத்தலத்தில் எடுத்து அம்பாளுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பு.