Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு பொன்னியம்மன் கோவில், கொங்கரப்பட்டு

அருள்மிகு பொன்னியம்மன் கோவில், கொங்கரப்பட்டு, விழுப்புரம் மாவட்டம்
**************************************************************************************

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கொங்கரப்பட்டில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்னியம்மன் சமேத பொன்னீசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கர்பக்கிரகத்தில் பொன்னியம்மனின் சிரசில் சிவலிங்கம் உள்ளது. அத்துடன் அம்மன் வலது காதில் சிறு குழந்தையை அணிகலனாக அணிந்துள்ளார்.

கொங்கரப்பட்டு பொன்னியம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை அம்மன் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்ச்சி நடக்கும்.

பல ஆண்டுகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்த இக்கோவிலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது.

அருள்மிகு பொன்னழகியம்மன் திருக்கோயில், ஓ.சிறுவயல்

அருள்மிகு பொன்னழகியம்மன் திருக்கோயில், .சிறுவயல் – 630 208 சிவகங்கை மாவட்டம்.
********************************************************************************************************

+91- 4577 – 264 778 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பொன்னழகியம்மன்
அம்மன் அழகியநாயகி
தல விருட்சம் மகிழம்
தீர்த்தம் அம்பாள் தெப்பம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் .சிறுவயல்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. ஒருசமயம் இக்காட்டில் சிலர் கவளக்கிழங்கு தோண்டும் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கிழங்கின் மீது கத்தி பட்டு ரத்தம் வெளிப்பட்டது.

பயந்த தொழிலாளர்கள் ஊர் மக்களிடம் இதனை தெரிவித்தனர். மக்கள் சென்று பார்த்தபோது அம்பாள் சுயம்புவாக இருந்ததைக் கண்டு, இவ்விடத்தில் கோயில் கட்டினர்.

கோயிலுக்கு முன்புறம், சிறிய கல்வடிவில், “கல்லுச்சியம்மன்காவல் தெய்வமாக இருக்கிறாள். இவளுக்கு குங்கும அர்ச்சனை செய்வது விசேடம்.

அனுமான் இராமனை வணங்கிய நிலையிலும், பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்ற அபய ஹஸ்த நிலையிலும் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால், ராமனின் திருப்பாதத்தை சரணடைந்து, அவரது பாதங்களை பிடித்த நிலையிலுள்ள அனுமானை சிவகங்கை மாவட்டம் ஓ.சிறுவயலில் உள்ள பொன்னழகியம்மன் கோயிலில் தரிசிக்கலாம்.