அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில், சுருளிமலை
அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில், சுருளிமலை, கம்பம், தேனி மாவட்டம்.
+91- 4554- 276715,93452 61022
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
சுருளிவேலப்பர் (சுருளி ஆண்டவர்) |
|
உற்சவர் | – |
வேலப்பர் |
|
தீர்த்தம் | – |
சுரபிதீர்த்தம் |
|
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப்பெயர் | – |
சுருதிமலை |
|
ஊர் | – |
சுருளிமலை |
|
மாவட்டம் | – | தேனி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை, மலையரசனான நம்பிராஜன் வளர்த்தார். அவளை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமணச் சீராக நம்பிராஜன், தனது ஆட்சிக்குட்பட்ட மலைப்பிரதேசங்களைக் கொடுத்தார். அதில் இதுவும் ஒன்று. இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டார். ஒருசமயம் சனி பகவான், தன் சஞ்சாரப்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள், தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுவாமி அவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால், “சுருதி” எனப்பட்ட தீர்த்தம், “சுருளி” என மருவியது. முருகனுக்கும் “சுருளி வேலப்பர்” என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டிக்கோலத்தில் இருப்பதால் இவர், “சுருளியாண்டி” என்றும் அழைக்கப்படுகிறார்.
இராவணேஸ்வரன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று, தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க இராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக்காக்க மகாவிஷ்ணு பூதசொரூபத்துடன் பஞ்சபூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த இராவணேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி மாவட்டம்.
+91 431 2607 344, 98949 84960 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மதியம் 1 மணி, மாலை 3.30 இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
சுப்பிரமணிய சுவாமி, ஆதிநாதர் (அக்னீஸ்வரர்) |
|
அம்மன் | – |
வள்ளிதேவசேனா , ஆதிநாயகி (பூர்வ சித்தி நாயகி) |
|
தல விருட்சம் | – |
வன்னிமரம் |
|
தீர்த்தம் | – |
சக்திதீர்த்தம் |
|
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப்பெயர் |
ஆதிவயலூர் |
||
ஊர் | – |
குமாரவயலூர் |
|
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இப்பகுதியில் வேட்டையாட வந்த சோழ மன்னன் ஒருவர் தண்ணீர் தாகம் எடுத்து நீருக்கு அலைந்து, இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு வரும் போது மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பு ஒன்றைக் கண்டு, அதனை ஒடித்துத் தாகம் தீர்க்க எண்ணி கரும்பை ஒடித்த போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அவ்விடத்தை தோண்டிப்பார்த்த போது சிவலிங்கம் இருந்ததாகவும் பின்னர் கோயில் எழுப்பியதாகவும் கர்ணபரம்பரை செய்தி கூறுகின்றது.
திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் “முத்தைத் திரு” பாடியபின்பு “வயலூருக்கு வா” என்று முருகன் செல்ல அதன்படி அருணகிரியார் இங்கு வந்துள்ளார். இங்குள்ள பொய்யாகணபதிதான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று செல்லப்படுகிறது. இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும் அறிவையும் பெற்றார். இத்தலத்து முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார். அத்தகைய பேரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கிருபானந்த வாரியாரின் தனிப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக உலகப் புகழ் பெற்ற கோயிலாக இன்று இக்கோயில் திகழ்கிறது.