அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 – 44-2722 2609 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5மணி முதல் 12.30மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

காமாட்சி அம்மன்

தல விருட்சம்

செண்பகம்

தீர்த்தம்

பஞ்ச கங்கை

ஆகமம்

சிவாகமம்

பழமை

2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

கச்சி

ஊர்

காஞ்சிபுரம்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான். ஆனாலும், அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில், அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால் தான் மரணம் நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால், அன்னை பராசக்தி காமாட்சியாக அவதாரம் எடுத்து, அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள். கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார்.

துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும், ஆதிசங்கரரால் கலியுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு.

அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில், அழிசூர்

அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில், அழிசூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அருளாலீசுவரர்

தாயார்

அம்புஜ குசலாம்பாள்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அழிசூர்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த அழகிய கிராமம் அழிசூர். அழிஞ்சல் மரத்தடியில் இலிங்கம் அமைத்து அகத்தியர் வழிபட்டதால் அழிசூர் என அழைக்கப்படுகிறது. கி.பி. 1123-ம் ஆண்டு விக்கிரமச் சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. சுங்கந் தவிர்த்த சோழர் சதுர்வேதி மங்கலம் என்பது அழிசூர் கிராமத்தின் முந்தைய பெயராகும். செய்யாறு நதியின் தென்கரையில், சோழர் காலத்தில் கட்டப்பட்டது இந்த ஆலயம்.

இக்கோயில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், நுழைவுவாயில் தெற்கு நோக்கி உள்ளது. கல்தூண் ஒன்று துவஜஸ்தம்பமாக நடப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. இங்குள்ள நந்திதேவரை வில்வம், அருகம்புல், வெல்லம், ஏலக்காய் கலந்த பச்சரிசி கொண்டு வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.