அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் கோயில், சிங்கப்பெருமாள் கோயில்
அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் கோயில், சிங்கப்பெருமாள் கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44-2746 4325, 2746 4441 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
பாடலாத்ரி நரசிம்மர் |
உற்சவர் |
– |
|
பிரகலாதவரதர் |
தாயார் |
– |
|
அஹோபிலவல்லி |
தல விருட்சம் |
– |
|
பாரிஜாதம் |
தீர்த்தம் |
– |
|
சுத்த புஷ்கரணி |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
சிங்கப்பெருமாள் கோயில் |
மாவட்டம் |
– |
|
காஞ்சிபுரம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. மூலவர் பாடலாத்ரி நரசிம்மர். சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கையை அபயகரமாகவும், இடது கை தொடை மீது வைத்த நிலையிலும் உள்ளார். மூன்று கண்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். உற்சவர் பிரகலாதவரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில், பிரணவகோடி விமானத்தின் கீழ் அருள்கின்றனர். மூலவர் குகைக்கோயிலில் அருள்பாலிப்பதால் அவரை வலம் வர வேண்டுமென்றால் சிறிய குன்றினையும் சேர்த்து வலம் வர வேண்டும்.
“பாடலம்” என்றால் “சிவப்பு.” “அத்ரி” என்றால் “மலை.” நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்தால் “பாடலாத்ரி” என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது. இது பல்லவர் கால குடைவரைக் கோயிலாகும். தாயார், ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர், இலட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன கோயில் முகப்பில் பெருமாளின் தசாவதாரக்காட்சிகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 12 ஆழ்வார்களும் இத்தலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர்.
அருள்மிகு வைகுண்டவாசர் திருக்கோயில், மாங்காடு
அருள்மிகு வைகுண்டவாசர் திருக்கோயில், மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 2627 2053, 2649 5883 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வைகுண்டவாசர் |
தாயார் |
– |
|
ஸ்ரீதேவி, பூதேவி |
தல விருட்சம் |
– |
|
மாமரம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
மாங்காடு |
மாவட்டம் |
– |
|
காஞ்சிபுரம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
கைலாயத்தில் ஒருசமயம் அம்பிகை சிவனின் கண்களை விளையாட்டாக மூடவே, உலகம் இருளில் மூழ்கியது. அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன், அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். பூலோகம் வந்த அம்பிகை மானிடப்பெண்ணாக பிறந்தாள். இருப்பினும், சிவன் மீது கொண்ட பக்தியால், தன்னைத் திருமணம் செய்யக்கோரி கடுந்தவம் செய்தாள். தங்கையை தாரை வார்த்துக் கொடுக்க வைகுண்டத்திலிருந்து மகாவிஷ்ணுவும் சீர் கொண்டு வந்தார். அச்சமயத்தில், அசுரகுருவான சுக்கிராச்சாரியாரும், தனது சில கோரிக்கைகளை நிறைவேற்ற, சிவனை வேண்டிப் பூலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். தனது குடும்பத்தை விட பக்தனுக்கே முதலிடம் தந்த சிவன், சுக்ராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். அம்பிகையும், சுக்ராச்சாரியாரும் தவம் புரிந்துகொண்டிருந்த இடம் இன்றைய மாங்காடு (சென்னை) எனசொல்லப்படுகிறது. சுக்ராச்சாரியாருக்கு வரமருளிய சிவன், அம்பிகைக்கும் காட்சி தந்து, உன்னை காஞ்சித்தலத்தில் மணப்பேன் என உறுதியளித்தார். அம்பிகையும் அவர் சொற்படி காஞ்சிபுரம் சென்று தவத்தை தொடர்ந்தாள். பூலோகம் வந்த மகாவிஷ்ணு, மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்த வேளையில், மார்க்கண்டேய மகரிஷி அவரைக் கண்டு நடந்த கதையைக் கூறினார். புண்ணியத்தலமான மாங்காட்டில் வைகுண்டவாசர் என்ற பெயரில் தங்கும்படியும் கேட்டுக் கொண்டார். பெருமாளும் அத்தலத்தில் எழுந்தருளினார்.