அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், சிவகங்கை
அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை, சிவகங்கை மாவட்டம்.
+91- 92455 28813, 99946 74433
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7.15 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சுந்தரராஜப் பெருமாள் |
தாயார் |
– |
|
ஸ்ரீதேவி, பூதேவி |
ஆகமம் |
– |
|
பாஞ்சராத்ரம், வைகானசம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
சிவகங்கை |
மாவட்டம் |
– |
|
சிவகங்கை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
17ம் நூற்றாண்டில், சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக்கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு கொண்ட இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசம் ஆகிய இரண்டு ஆகமங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில் இக்கோயிலை அமைத்தார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தர்ராஜப் பெருமாளும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவருடைய தாயார் மகமுநாச்சியார் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து கோயிலை முழுமையாக்கினார். இவர்கள் இருவருக்கும் மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிளை விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகப் பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார். வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தர்ராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார். மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். “சவுமியம்” என்றால் “அழகு.” பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் இராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில், சிங்கம்புணரி
அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில், சிங்கம்புணரி, திருப்புத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்.
+91- 98650 62422 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சேவுகப் பெருமாள் |
தல விருட்சம் |
– |
|
வில்வம் |
தீர்த்தம் |
– |
|
புஷ்கரணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
சிங்கம்புணரி |
மாவட்டம் |
– |
|
சிவகங்கை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது. வியப்படைந்த வேடுவன், “சேவுகபெருமாளே. மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்” என்றதுடன், “பெருமாளே” என்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர்,”சேவுகப்பெருமாள் அய்யனார்” என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.
சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாகப் பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.