அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில், பேளூர்
அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில், பேளூர், சேலம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலன் |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
பேளூர் |
மாவட்டம் |
– |
|
சேலம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
அன்னை பராசக்தி பல அவதாரங்களை பூமியில் எடுத்தாள். காமாட்சி, விசாலாட்சி, உலகம்மை, பார்வதி, தாட்சாயணி. இப்படி பல பெயர்களில் அவதரித்த அவள், பழங்கால மதுரையில் மீனாட்சி என்ற பெயரில் தங்கினாள். அப்போது அவளுக்கு ஒரு பக்தை இருந்தாள். அவள் மீனாட்சியைக் குழந்தையாக நினைத்து தாலாட்டு பாடுவாள்; தூங்க வைப்பாள்; தன்னை மீனாட்சியின் அன்னையாகவே உருவகம் செய்து, பக்தியில் ஆழ்ந்தாள். அவளது பக்தியை மெச்சிய மீனாட்சி, முற்பிறவியில், அவளை காஞ்சனமாலை என்ற பெயரில் அரசியாகப் பிறக்கும்படியும், அவளுக்குத் தான் மகளாகப் பிறப்பதாகவும் வாக்களித்தாள். அதன்படியே மீனாட்சியின் பிற்கால கோயில் அமைந்தது. அவளுக்கே பெருமாள் அண்ணனாக இருந்து, சுந்தரேஸ்வரரை மணம் முடித்து வைத்தார். முந்தைய பராசக்தி வடிவமான மீனாட்சி, பெருமாளுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் தாயாகத்தான் இருந்திருக்கிறாள். அவ்வாறு அவள் தாயாக அமர்ந்த தலம்தான், தனி சன்னதியில், வயதான தோற்றத்துடன் மரகதவல்லி மீனாட்சி என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறாள்.
அருள்மிகு அழகிரிநாதர் திருக்கோயில், சேலம்
அருள்மிகு அழகிரிநாதர் திருக்கோயில், சேலம், சேலம் மாவட்டம்.
+91- 427 – 222 1577 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
அழகிரிநாதர் |
தாயார் |
– |
|
சுந்தரவல்லி |
தீர்த்தம் |
– |
|
வஞ்சுளபுஷ்கரணி |
ஆகமம் |
– |
|
வைகானசம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
சேலம் |
மாவட்டம் |
– |
|
சேலம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
மகாவிஷ்ணு, வைகுண்டத்தில் மகாலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரைக்காண பிருகு முனிவர் வந்தார். முனிவரை கவனித்தாலும் கவனிக்காதது போல் நடித்த விஷ்ணு இலட்சுமியுடன் பேசிக்கொண்டே இருந்தார். தன்னை விஷ்ணு அவமதிக்கிறார் என்றெண்ணிய முனிவர், கோபம்கொண்டு அவரை உதைக்கச் சென்றார். தனது கண்முன்னேயே கணவரின் நெஞ்சில் முனிவர் உதைக்க வருவதைக்கண்டு வெகுண்ட மகாலட்சுமி கோபித்துக்கொண்டு சென்றார். பொறுமையுடன் இருந்த விஷ்ணு, முனிவரின் அகங்காரத்தை குறைக்க எண்ணி, முனிவரின் பாதத்தில் இருந்த ஞானக்கண்ணை பறித்து அவரது சக்தியை இழக்கச் செய்தார். தவறை உணர்ந்த பிருகுமுனிவர், தன்னை மன்னிக்கும்படி நாராயணனிடம் வேண்டினார். கோபித்துக் கொண்டு சென்ற தாயாரை எண்ணி தவம் செய்து வணங்கிவர, மன்னிப்பு கிட்டும் என்றார் விஷ்ணு. அதன்படி இத்தலத்துக்கு வந்த முனிவர் அங்கு தவமிருந்தார். ஒருநாள் வில்வமரத்தினடியில் யாருமில்லாமல் தனியே அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கண்டார். மிகவும் அழகாக இருந்த குழந்தைக்கு “சுந்தரவல்லி” எனப்பெயரிட்டு வளர்த்தார். அவள் பருவ வயதை அடைந்தபோது, அவளை மணமுடிக்கும் தகுதி இறைவனுக்கு மட்டுமே உள்ளது என உணர்ந்த அவர், மகாவிஷ்ணுவை வேண்டினார். அழகியநாதராக வந்த மகாவிஷ்ணு, சுந்தரவல்லியைத் திருமணம் செய்து கொண்டார். பின், முனிவர் வளர்த்து வந்த குழந்தைதான் மகாலட்சுமி என உணர்த்திய விஷ்ணு, தாயாருடன் காட்சி தந்தார். தாயார் அவரை மன்னித்தார். தனக்கு திருமணக்காட்சி தந்து அருளியதைப்போல இங்கு வரும் மக்களுக்கும் அருள வேண்டுமென அவர் வேண்டியதால், இருவரும் இங்கு தங்கிவிட்டனர்.