Monthly Archives: April 2012
பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர
பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர
முதலில் சுயநலப்போக்கு ஒழியவேண்டும். தன்னைப்போல் பிறரையும் நேசிக்கவேண்டும். பிரதிபலன் எதிர்பாரா மனநிலை வேண்டும். பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்னும் மனதில் உதிக்கவேண்டும். அது வளர கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தல் வேண்டும்.
வடலூர் |
கடலூர் |
|
இராஜேந்திர சோழீஸ்வரர் | இளையான்குடி | சிவகங்கை |
காசிநாதசுவாமி | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
பிரம்மகத்தி தோஷம் நீங்க
பிரம்மகத்தி தோஷம் நீங்க
செவ்வாய் தோஷம், புத்திர தோஷம், சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம்,களத்திர தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், நவக்கிரகத் தோஷங்கள்; இன்னும் எத்தனையோ தோஷங்கள்.
பிரம்மகத்தி தோஷம் என்பது சாதகத்தில் பெரிதாகச் சொல்லப்படும். கொலை செய்தல், மாற்றான் மனை கவர்தல், கர்ப்பிணிப் பெண்ணை புணர்தல், பண மோசடி செய்தல் போன்றவர்களுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும். பின்னர் வந்தவர்கள், “குறிப்பாக பிராமணர்களை துன்புறுத்துபவர்களுக்கு இந்த பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்” என்று சேர்த்துக்கொண்டனர். அறியாமையில் திளைக்கும் மனிதர்களிடமிருந்து பணம் பறிக்க தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தோஷங்களைப் படைத்துக்கொண்டனர் ஒரு சாரார்.
பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.
பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.
தோஷங்களுக்குப் பரிகாரங்கள் செய்தால் தோஷங்கள் நீங்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை மனமுருக வேண்டிக்கொண்டாலே இன்னல் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆலந்துறையார் (வடமூலநாதர்) | கீழப்பழுவூர் | அரியலூர் |
திருநோக்கிய அழகிய நாதர் | திருப்பாச்சேத்தி | சிவகங்கை |
பிரம்மசிரகண்டீஸ்வர் | திருக்கண்டியூர் | தஞ்சாவூர் |
குக்கி சுப்ரமண்யா |
தட்ஷிண கன்னடா |
|
ஞீலிவனேஸ்வரர் | திருப்பைஞ்ஞீலி | திருச்சி |
கொழுந்தீஸ்வரர் | கோட்டூர் | திருவாரூர் |
திருமறைக்காடர் | வேதாரண்யம் | நாகப்பட்டினம் |