Monthly Archives: February 2012
அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில்
அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.
+91- 4652- 232 420, 94439 92216
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாகராஜர் | |
தலவிருட்சம் | – | ஓடவள்ளி | |
தீர்த்தம் | – | நாகதீர்த்தம் | |
ஆகமம் | – | சைவம், வைணவம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | நாகர்கோவில் | |
மாவட்டம் | – | கன்னியாகுமரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பெண் ஒருத்தி வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தாள். அவ்வேளையில், ஒரு கதிரில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதைக்கண்டு பயந்தவள், ஊருக்குள் சென்று மக்களிடம் கூறினாள். அவர்கள் இங்கு வந்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்ததைக் கண்டனர். பின்பு நாகராஜரைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர். தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்டவர்மா, இங்கு வந்தார். சுவாமியை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். மகிழ்ந்த மன்னர் இங்கு பெரியளவில் கோயில் எழுப்பினார். சுவாமியின் பெயரால் இந்த ஊருக்கும், “நாகர்கோவில்” என பெயர் வந்தது. தமிழகத்தில் நாகர் (பாம்பு) வழிபாட்டிற்கென அமைந்த பெரிய கோயில் நாகர்கோவில் மட்டுமே ஆகும்.
சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடாழ்வார், விநாயகருக்கு மூஞ்சூறு, முருகனுக்கு மயில் என ஜீவராசிகளை சுவாமிகளின் வாகனமாக்கி வழிபடுகிறோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனியே கோயில்கள் அமைத்து வழிபடும் வழக்கம் இல்லை. ஆனால், நாகத்திற்கு சன்னதி அமைத்து வணங்குகிறோம். நாகர் வழிபாடு, மனித வாழ்விற்கான உயர்ந்த தத்துவத்தை உணர்த்துகிறது. புழுதியில் சென்றாலும், நாகத்தின் மீது தூசு ஒட்டுவதில்லை. அதாவது தான் எதில் இருந்தாலும், அதைத் தன்னில் ஏற்றுக்கொள்ளாத தன்மையுடையதாக நாகம் இருக்கிறது. மனிதர்களும் மனைவி, மக்கள், பொன், பொருள் என எல்லாவற்றிலும் உழன்றாலும், அவற்றின் மீதும் பற்றில்லாதவர்களாக வாழ வேண்டும் என்பதை நாகம் உணர்த்துகிறது.
அருள்மிகு ஹெத்தையம்மன் நாகராஜர் திருக்கோயில், மானிஹடா, மஞ்சக்கம்பை
அருள்மிகு ஹெத்தையம்மன் நாகராஜர் திருக்கோயில், மானிஹடா, மஞ்சக்கம்பை, நீலகிரி மாவட்டம்.
+91-423 228 6258, 94869 04422
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாகராஜர் | |
அம்மன் | – | ஹெத்தையம்மன் | |
தலவிருட்சம் | – | ஆலமரம் | |
தீர்த்தம் | – | சந்தானக்குளம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மஞ்சக்கம்பை | |
மாவட்டம் | – | நீலகிரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மலைப்பகுதியான மஞ்சக்கம்பையில் அம்மன் கோயில் கட்டுவதற்காக மானிஹடா என்ற பகுதியில் மண் எடுத்துக் கொண்டிருக்கும் போது திடிரென சப்தம் கேட்டது. அந்த இடத்தில் 2 குகையும், ஒரு நாகராஜர் சிலையும் இருந்தது. பின் அந்த இடத்தில் நாகராஜருக்கும் கோயில் கட்ட குழி வெட்டிய போது பாறை ஒன்று இடையூறாக இருந்தது. அதை அகற்றிய போது அதற்கடியில் நாகம் ஒன்று உயிரோடிருந்தது. இதையடுத்து அந்தந்த இடங்களில் அம்மனுக்கும், நாகராஜருக்கும் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. இந்த நாகம் தற்போதும் கோயிலில் உயிரோடு இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கோயில் நீலகிரி மாவட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மானிஹடா மகா சக்தி என்று மிகப் பெருமையுடன் அழைக்கப்படும் மிக சிறப்பு வாய்ந்த கோயில். அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து வழிபடும் மிக முக்கியமான கோயில்.
இராமர் அயோத்திக்குத் திரும்பிப் போகும்போது இந்த மஞ்சக்கம்பை மானிஹடா வழியாக சென்றதாக ஐதீகம். இங்குள்ள இராமர் பாதம் மிகப் புனிதமாகப் பக்தர்களால் வணங்கப்படுகிறது.