Monthly Archives: February 2012
அருள்மிகு சுவாமி நாராயண திருக்கோயில், அக்ஷர்தாம்
அருள்மிகு சுவாமி நாராயண திருக்கோயில், அக்ஷர்தாம், அகமதாபாத், குஜராத் மாநிலம்.
+91-79 – 23260001-2 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுவாமி நாராயணர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | அக்ஷர்தாம் | |
மாவட்டம் | – | அகமதாபாத் | |
மாநிலம் | – | குஜராத் |
குஜராத் மாநிலத்தில் உள்ள சாப்பியா என்ற கிராமத்தில் 1781ம் ஆண்டு சுவாமி நாராயணன் அவதரித்தார். பிஞ்சில் பழுத்த பழம் என்ற வாசகத்துக்கு இவரே சிறந்த உதாரணம். சுவாமி நாராயண் தன் ஏழு வயதிலேயே நான்கு வேதங்கள், உபநிஷதங்கள், பகவத்கீதை மற்றும் ஆன்மிக நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். தன் பத்தாம் வயதில் வாரணாசி (காசி) சென்ற அவர், விசிஷ்டாத்வைத தத்துவம் குறித்து பண்டிதர்கள் மத்தியில் பேசி கைத்தட்டல் பெற்றார். 11ம் வயதிலேயே தன் வீட்டை விட்டு வெளியேறினார். குடும்பப் பற்றைத் துறந்து தீவிர ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டார்.
இந்தியா முழுவதும் உள்ள புண்ணிய சேத்திரங்களுக்கு பயணம் செய்தார். அவரது இடுப்பில் கட்டிய ஒரு துண்டைத் தவிர வேறு எதுவும் அவரிடமில்லை. நடந்தே யாத்திரை சென்றார். முதலில் இமயமலையிலுள்ள பனிச்சிகரங்களில் உள்ள புண்ணியப்பகுதிகளை தரிசித்தார். பின்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கன்னியாகுமரி வரை அவரது பயணம் நீடித்தது. மதுரை, ராமேஸ்வரம் முதலான புண்ணிய சேத்திரங்களும் இதில் அடக்கம். மீண்டும் குஜராத்தை அடையும் போது அவருக்கு வயது 18 ஆகியிருந்தது. இந்த ஏழு ஆண்டு காலத்துக்குள் அவர் நடந்தே பயணித்த தூரம் 12 ஆயிரம் கி.மீட்டர். இராமானந்த சுவாமி என்பவர் இளமையிலேயே இவருக்கு இருந்த ஆன்மிக ஆர்வத்தைப் பார்த்து, தனது சீடர்களிடம், “இவரே இனி உங்கள் குரு” என அறிவித்தார். அவருக்கு “சகஜானந்தா” எனப் பெயர் சூட்டினார். சகஜானந்தரின் சிறப்பை அறிந்த பல்துறை வல்லுநர்கள் அவரது பக்தர்கள் ஆயினர். இவர்களில் 3ஆயிரம் சாதுக்களும் அடக்கம். அவர்கள் சுவாமி நாராயணனைத் தங்கள் தெய்வமாகவே கருதினர்.
அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், இராமேஸ்வரம்
அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம்.
இக்கோயிலில் இரும்பு கம்பிக்கதவு போடப்பட்டிருப்பதால் வெளியில் இருந்தே சுவாமியை தரிசிக்கலாம்.
மூலவர் | – | சுக்ரீவர் | |
தீர்த்தம் | – | சுக்ரீவர் தீர்த்தம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | இராமேஸ்வரம் | |
மாவட்டம் | – | இராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
வானரனாகிய வாலி, தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததோடு, அவனை விரட்டியடித்தான். சுக்ரீவனுக்காக இராமர், வாலியை மறைந்திருந்து கொன்றார். சுக்ரீவன், இராமர் சீதையை மீட்பதற்கு உதவி செய்தான். இவ்வாறு வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இவ்விடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். சுக்ரீவன் வழிபட்ட தலத்தில் பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுக்ரீவன் சன்னதியுடன் மட்டும் அமைந்த, மிகச்சிறிய கோயில் இது. கோயிலுக்கு வெளியில் சுக்ரீவர் உண்டாக்கிய தீர்த்தமும், எதிரே வங்காள விரிகுடா கடலும் இருக்கிறது. தோஷ நிவர்த்தி தலம்.