Monthly Archives: February 2012
அருள்மிகு வைகுண்ட மூர்த்தி திருக்கோயில், கோட்டையூர்
அருள்மிகு வைகுண்ட மூர்த்தி திருக்கோயில், கோட்டையூர், சுந்தரபாண்டியம், விருதுநகர் மாவட்டம்.
காலை 6 மணி முதல், மாலை மணி 5 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வைகுண்டமுர்த்தி | |
அம்மன் | – | பூரண, புஷ்கலா | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கோட்டையூர் | |
மாவட்டம் | – | விருதுநகர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சுந்தரபாண்டியத்தில் பெரியகோயில் என்றழைக்கப்படும் வைகுண்ட மூர்த்தி சுவாமி கோயிலில் தர்மசாஸ்தாவாகவும், அய்யனாராகவும் இருவேறு உருவங்களில் எழுந்தருளி அப்பகுதி மக்களை காத்து வருகிறார். வைகுண்டமூர்த்தி சுவாமி கோயில் கி.பி. 1620ம் ஆண்டில் தற்போதைய சுந்தரபாண்டியம் பகுதியை ஆட்சி செய்து வந்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டு வரலாற்றுச் சிறப்புடன் திகழ்கிறது. இக்கோயிலில், அந்த மன்னனின் கலை நயத்தை வெளிப்படுத்தும் அழகிய சிற்ப ஓவியங்கள் இன்னும் அவனது புகழை பறைசாற்றும் வகையில் எழிலுற அமைந்துள்ளன.
இங்கு முக்கியத் திருவிழா பாரி வேட்டை. துஷ்டசக்திகளை வேரறுக்கவும், தன்னைச் சுற்றி சார்ந்துள்ள துஷ்ட தேவதைகள், 21 சேனை தளங்களுக்கு இரணபலி வழங்கவும் வருடம் ஒரு முறை அய்யனார் வேட்டைக்குச் செல்வதாக ஐதீகம். இதற்காக நடத்தப்படும் பாரிவேட்டை திருவிழா இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், கருத்தம்பட்டி
அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், கருத்தம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91-421 232 2250 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வாழைத் தோட்டத்து அய்யன் |
தல விருட்சம் |
– |
|
கிளுவை மரம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
கருத்தம்பட்டி |
மாவட்டம் |
– |
|
கோயம்புத்தூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
மரங்களிலேயே மிகவும் சிறந்த தன்மை உடையது வாழை. இதில் எந்த பொருளும் வீண்போகாது. வாழையடி வாழையாக தழைக்கக்கூடியது. இதைப் போன்றே, வேண்டும் அனைவருக்கும் உதவும் தெய்வம் என்பதால், கருத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மவாட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறார்.அய்யனின் இயற்பெயர் சின்னையன். இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் அவதரித்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். மாடு மேய்க்கும் போது கற்களை சேர்த்து தெய்வ உருவமாக்கி வழிபடுவார். ஒருநாள் ஒரு பெரியவர் இவரது வேண்டுகோளை ஏற்று சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்து அருளினார். அத்துடன் சின்னையனின் வீட்டில் ஒரு அறையில் இதே பெரியவர் சிவபெருமான் உமாதேவியருடன் வீற்றிருக்கும் கோலத்தை காட்டி மறைந்து விட்டார். பின்னர் சின்னையன் தன்னை நாடி வந்தவர்களின் தீராப்பிணியையும், பாம்பு மற்றும் தேள் போன்ற கொடிய நச்சுப்பிராணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபூதியாலும், பஞ்சாட்சர மந்திரத்தாலும் குணப்படுத்தி வந்தார். ஆனால் எவரிடமுமம் கூலி எதிர்பார்க்கவில்லை. ஒரு முறை அப்பகுதி அதிகாரி மனைவியின் வெண்குஷ்ட நோயை திருநீற்றால் குணப்படுத்தியதற்கு ஆயிரம் வெண் பொற்காசுகளை தாசில்தார் கொடுத்தார். ஆனால், சின்னையன் ஏற்காமல் அந்த பணத்தை ஆண்டவனுக்கே செலவழிக்க கூறிவிட்டார். அவர் ஒவ்வொரு ஆண்டும் திருப்பேரூர் சென்று நடராஜரை தரிசிப்பது வழக்கம். தன் 72வது வயதில் திருவாதிரைக்கு முதல் நாள் அவரது மக்கள் அவரை திருப்பேரூருக்கு அழைத்தனர். ஆனால் அவர் “நான் நாளை கயிலாச நாதரை தரிசிக்கச் செல்கிறேன்” என்று கூறிவிட்டார்.