Monthly Archives: December 2011
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டீஸ்வரம்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டீஸ்வரம், (வழி) சன்னாநல்லூர், நன்னிலம் ஆர்எம்எஸ், திருவாரூர், திருவாரூர் மாவட்டம்.
+91 – 4366 – 228 033 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பசுபதீஸ்வரர் | |
அம்மன் | – | சாந்த நாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | க்ஷீரபுஷ்கரணி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கொண்டீச்சரம் | |
ஊர் | – | திருக்கொண்டீஸ்வரம் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
சிவபெருமான், தன்னை பூமியில் உள்ள மனிதர்கள் வழிபட்டு மேன்மை அடைய வேண்டும் என்பதற்காக வில்வாரண்யத்தில் மறைந்திருந்தார். அன்னை பார்வதி பசுவடிவெடுத்து, இத்தலத்தை தன் கொம்பால் கீறிய போது அங்கு மறைந்து இருந்த இறைவனின் தலையில் கொம்பு பட்டு ரத்தம் வடிந்தது. அதைக்கண்ட பசு, இலிங்க வடிவில் இருந்த இறைவனின் தலையில் பால் சொரிந்து காயத்தை ஆற்றி வழிபட்டது. பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் லிங்கத்தில் நாம் காணலாம். காமதேனு வழிபட்ட தலம். “கொண்டி” என்றால் “துஷ்ட மாடு” என்று பொருள். கொண்டி வழிபட்டதால் இத்தலம் “கொண்டீஸ்வரம்” என அழைக்கப்படுகிறது.
அருள்மிகு மதுவனேஸ்வரர் கோயில், நன்னிலம்
அருள்மிகு மதுவனேஸ்வரர் கோயில், நன்னிலம், திருவாரூர் மாவட்டம்.
+91- 94426 82346, +91- 99432 09771 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மதுவனேஸ்வரர் (கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாச நாதர்) | |
அம்மன் | – | மதுவனேஸ்வரி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மதுவனம், திருநன்னிலத்துப் பெருங்கோயில் | |
ஊர் | – | நன்னிலம் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
முன்னொரு காலத்தில் தேவர்களின் சபையில் ஆதி சேஷனுக்கும் வாயு பகவானுக்கும் போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் மகாமேருவின் ஆயிரம் சிகரங்களையும் மறைத்து கொண்டான். எனவே வாயுபகவானால் மகா மேருவை அசைக்க முடியவில்லை. இதனால் எல்லா உலகங்களும் அதிர்வடைந்தது. உலகமே அழிந்து விடும் என அஞ்சிய தேவர்கள் ஆதிசேஷனிடம் வேண்டிக்கொள்ள, மகா மேருவின் ஒரே ஒரு சிகரத்தை மட்டும் விட்டுக்கொடுத்தான். வாயுபகவான் அந்த சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்து செல்லும்போது அந்த சிகரத்தின் சிறிய துளி இந்த தலத்தில் விழுந்ததாகத் தல புராணம் கூறுகிறது. சமவெளியாக இருந்த இப்பகுதியில், சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கிருதா யுகத்தில் பிருகத்ராஜன் என்ற மன்னன் செய்த தவப்பயனாக சிவபெருமான் இத்தலத்தில் “தேஜோ லிங்கமாய்” காட்சி தந்தார். துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களைத் தேனீக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை கூடுகட்டி வசிக்கச்செய்து, இலிங்க வழிபாடு செய்யும்படி கூறினார். தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால் இறைவன் “மதுவனேஸ்வரர்” என்றும் அம்மன் “மதுவன நாயகி” என்றும் இத்தலம் “மதுவனம்” என்றும் அழைக்கப்பட்டது. சுவாமியின் கர்ப்பகிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களிலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்து வருகின்றன.