Monthly Archives: December 2011
அருள்மிகு மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகா திருக்கோயில், திருமீயச்சூர்
அருள்மிகு மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகா திருக்கோயில், திருமீயச்சூர், திருவாரூர் மாவட்டம்.
+91-4366-239 170, 94448 36526 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மேகநாதசுவாமி (மிகரா அருணேஸ்வரர், முயற்சிநாதர்) | |
உற்சவர் | – | பஞ்சமூர்த்தி | |
அம்மன் | – | லலிதாம்பிகை, சவுந்திரநாயகி | |
தல விருட்சம் | – | மந்தாரை, வில்வம் | |
தீர்த்தம் | – | சூரியபுஷ்கரணி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருமீயச்சூர் | |
ஊர் | – | திருமீயச்சூர் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி, அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர இரதத்தில் இலலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி, அவளைக் கோபம் தணியும்படியும், இதற்காக “மனோன்மணி” என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார். அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, “வசின்யாதி வாக் தேவதைகள்” என்பவர்களை வரவழைத்து, தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே “ஸ்ரீ மாத்ரே” என துவங்கும் “இலலிதா சகஸ்ரநாமம்” ஆயிற்று.
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம்
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம், திருவாரூர் மாவட்டம்.
+91- 4366-291 457, +91- 94427 66818 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மகாகாளநாதர், காளகண்டேஸ்வரர் | |
அம்மன் | – | பயக்ஷர்ம்பிகை, அச்சம் தவிர்த்த நாயகி | |
தல விருட்சம் | – | மருதமரம், கருங்காலி | |
தீர்த்தம் | – | மாகாள தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவம்பர் மாகாளம், கோயில் திருமாகாளம் | |
ஊர் | – | திருமாகாளம் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாறர் தன் மனைவி சுசீலா தேவியுடன் இத்தலத்தில் வசித்தார். இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெறவேண்டும் என விரும்பினார். இறைவனை நேரடியாக அழைக்க வேண்டுமானால், அவரது நண்பர் சுந்தரரின் நட்பை முதலில் பெற நினைத்தார். இந்நிலையில் சுந்தரருக்கு இருமல் ஏற்பட்டது. அவரைச் சந்திக்க முடியவில்லை. பலரும் வைத்தியம் செய்தனர். இருமல் தீரவில்லை. இதையறிந்த சோமாசிமாறர் அவரது நோய் தீர தினமும் தூதுவளை கீரை கொடுத்து அனுப்பினார். இதைக் கொடுத்து அனுப்புவது யாரென்பது சுந்தரருக்குத் தெரியாது. ஆனால், மனைவி சங்கிலி அம்மையாருக்கு கீரை கொடுத்தனுப்புவது யார் என்று தெரியும்.