Monthly Archives: December 2011
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி, திருவாரூர் மாவட்டம்.
+91-94439 21146 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வீரட்டானேஸ்வரர் | |
அம்மன் | – | ஏலவார்குழலி, பரிமள நாயகி | |
தல விருட்சம் | – | துளசி | |
தீர்த்தம் | – | சக்கர தீர்த்தம், சங்குதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவிற்குடி | |
ஊர் | – | திருவிற்குடி | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனைத் தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன், சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியைப் பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுரக் குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க, வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வைத் துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர்த் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு “ஜலந்தரன்” என பெயர் வைக்கப்பட்டது. அவன் பெரியவனானதும், மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன், “தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ, அப்போது எனக்கு அழிவு வரட்டும்” என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்கச் சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். “இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும்” என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன், “என் மனைவியின் கற்பின் திறனால், எனக்கு அழிவு வராது” என சவால் விட்டான். இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், “நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்நேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க, அவன் கழுத்தைச் சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், “நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்” என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான் விஷ்ணு இராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது.
அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர்
அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர், திருவாரூர் மாவட்டம்.
+91-4366-237 007 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சவுந்தரேஸ்வரர் (அழகியநாதர், தாலவனேஸ்வரர்) | |
அம்மன் | – | பிரகந்நாயகி, பெரியநாயகி | |
தல விருட்சம் | – | பனைமரம் | |
தீர்த்தம் | – | பராசர தீர்த்தம், அமிர்த தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தாலவனம், பனையூர் | |
ஊர் | – | திருப்பனையூர் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், சுந்தரர் |
சுந்தரர், திருவாரூர் பங்குனி உத்தரத் திருநாளுக்காக, பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று “தம்மையே புகழ்ந்து” என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வந்தார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, “அரங்காட வல்லார் அழகியர்” என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் “சந்தித்த தீர்த்தம்” என்றும் பெயருடன் திகழ்கிறது.
கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது. இராஜகோபுரமில்லை. வாயில்மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது. உள்நுழைந்ததும் வலதுபுறம் பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். தெற்கு நோக்கியது. இத்தலத்தின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னால் துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளது. இப்பெயர்க்குச் சொல்லப்படும் காரணம் வருமாறு:-