Monthly Archives: December 2011
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி, புதுச்சேரி.
+91- 4368 – 265 693, 265 691, 98940 51753 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுந்தரேஸ்வரர் | |
உற்சவர் | – | வேடமூர்த்தி | |
அம்மன் | – | சாந்தநாயகி | |
தல விருட்சம் | – | புன்னை | |
தீர்த்தம் | – | தேவதீர்த்தம் | |
ஆகமம் | – | காரணாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | புன்னகவனம் | |
ஊர் | – | திருவேட்டக்குடி | |
மாவட்டம் | – | புதுச்சேரி | |
மாநிலம் | – | புதுச்சேரி | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர் |
மகாபாரதப் போரின்போது பாண்டவர்கள், கவுரவர்கள் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். வேதவியாசர் அர்ஜுனரிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனர் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டித் தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக முகாசுரனை அனுப்பினார் துரியோதனர். பன்றி வடிவில் வந்த அசுரன் அவரது தவத்தை கலைக்க முயன்றான். அர்ஜுனர் அசுரனை அம்பால் வீழ்த்தினார். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச்செல்ல முயன்றார். அர்ஜுனர் அவரிடம் பன்றியை தர மறுத்தார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவன், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், “ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா?” என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், “அர்ஜுனன் ‘மஸ்யரேகை‘ (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்” என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். அர்ஜுனர் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார்.
ஒருசமயம் கைலாயத்தில் பார்வதிதேவி சிவனிடம், “உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்? நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே” என்றாள். அம்பாளின் ஆணவத்தை அறிந்த சிவன், அவளை பூலோகத்தில் மீனவப்பெண்ணாகப் பிறக்கும்படி செய்துவிட்டார். அதன்படி அம்பாள் இத்தலத்தில் மீனவக்குழந்தையாக பிறந்தாள். சிவன் மீது பக்தி கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள். சிவனும், மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் மாசி திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச்சென்று “மாப்பிள்ளை அழைப்பு” கொடுக்கின்றனர். அப்போது, மீனவர்கள் சிவனை, “மாப்பிள்ளை” என்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் திருமண தோஷங்கள் நீங்கும், விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு கோடிக்குழகர்(அமுதகடேஸ்வரர்) திருக்கோயில், கோடியக்காடு
அருள்மிகு கோடிக்குழகர்(அமுதகடேஸ்வரர்) திருக்கோயில், கோடியக்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91 – 4369 272 470 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர் | |
அம்மன் | – | அஞ்சனாட்சி, மைத்தடங்கண்ணி | |
தல விருட்சம் | – | குராமரம் | |
தீர்த்தம் | – | அக்னி தீர்த்தம், அமுதக்கிணறு | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில் | |
ஊர் | – | கோடியக்காடு | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், சுந்தரர் |
மிகவும் பழமையானது இந்தக்கோயில். இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்குச் செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், இராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார். இலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், இராமபிரான் பின்பக்கமாக சென்று ராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் இராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது. இராமன் இலங்கை செல்லும்போது இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். இவருக்கு “அமிர்தகடேஸ்வரர்” என்ற பெயரும் உண்டு.