Monthly Archives: December 2011
அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம்
அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம், காரைக்கால், புதுச்சேரி.
+91- 4368 – 226 616 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | யாழ்மூரிநாதர் | |
அம்மன் | – | தேனாமிர்தவல்லி | |
தல விருட்சம் | – | வாழை | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம் | |
ஆகமம் | – | மகுடாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருத்தருமபுரம் | |
ஊர் | – | தருமபுரம் | |
மாவட்டம் | – | புதுச்சேரி | |
மாநிலம் | – | புதுச்சேரி | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர் |
சிவன், மார்க்கண்டேயரை பிடிக்க வந்த எமதர்மனை, திருக்கடையூரில் சம்காரம் செய்து அவரது பதவியை பறித்தார். இதனால், பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறப்பின்றி பெருகின. பாரம் தாங்காத பூமிதேவி, எமதர்மனை உயிர்ப்பிக்கும்படி வேண்டினாள். அதேசமயம் எமதர்மனும் தன் தவறை மன்னித்து மீண்டும் பணி வழங்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டான். எமனுக்கு அருள் செய்வதற்காக சிவன், பூலோகத்தில் தவமிருந்து தன்னை வழிபட்டுவர இழந்த பணி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி எமன் சிவத்தல யாத்திரை சென்றான். இத்தலம் வந்த எமதர்மன் தீர்த்தம் உண்டாக்கி, தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் பணி கிடைக்கப்பெறும் என்றார். எமன் தனக்கு அருள் செய்ததுபோலவே இங்கு அருள வேண்டும் என வேண்டவே, சிவன் இங்கே தங்கினார்.
எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்த நீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். திருஞானசம்பந்தரின் சிவ பணியை அறிந்த நீலகண்ட யாழ்ப்பாண நாயன்மாரும், அவரது மனைவி மதங்கசூளாமணியும் அவருடன் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும் இனிமையாக யாழ் இசைக்கும் திறமை பெற்றிருந்ததால் யாழ்ப்பாணர் சற்று கர்வம் கொண்டார். அவரது கர்வத்தை அடக்க சிவன் எண்ணம் கொண்டார்.
அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது, சம்பந்தர் பதிகம் பாடினார். யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து, தன் உயிரை விடச் சென்றார். அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து யாழை வாங்கி, சம்பந்தரின் பதிகத்திற்கேற்ப வாசித்து, நடனம் ஆடினார். தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்கப்பெற்றார்.
அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிசேரி எனும் காரைக்கோயில் பத்து
அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிசேரி எனும் காரைக்கோயில் பத்து, காரைக்கால், புதுச்சேரி மாநிலம்.
+91- 4368-221 009, 97866 35559 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பார்வதீஸ்வரர் | |
அம்மன் | – | பார்வதியம்மை (சுயம்வர தபஸ்வினி) | |
தல விருட்சம் | – | வில்வம், வன்னி | |
தீர்த்தம் | – | சத்தி, சூரிய தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருத்தெளிசேரி | |
ஊர் | – | திருத்தெளிச்சேரி, காரைக்கோயிற்பத்து | |
மாவட்டம் | – | புதுச்சேரி | |
மாநிலம் | – | புதுச்சேரி | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர் |
சூரியபகவான் தனது துணைவியான சாயா தேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால், அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். இதனை நாரதர் மூலம் அறிந்த அவளது தந்தை சூரியனை சபித்து விட்டார். இதனால், சூரியன் தனது ஒளியை இழந்து வருந்தி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி பார்வதீஸ்வரரை வழிபட்டான். இவனது வழிபாட்டிற்கு மகிழ்ந்த இறைவன் சாபத்தை நீக்கி அருளினார். சூரியன் வழிபட்டதால், இதனை “பாஸ்கரத்தலம்” என்கின்றனர். ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது பட்டு பூஜை நடக்கிறது.
பார்வதிதேவி காத்யாயன முனிவரின் மகளாக அவதரித்து, இத்தல இறைவனை வழிபட்டு அவருடன் கலந்தாள். “பார்வதியம்மை” என்றும், “சுயம்வர தபஸ்வினி” என்றும் பெயர் பெற்று, திருமண வரம் தரும் நாயகியாக அருளுகிறாள். சிவபெருமான் இத்தலத்தில் “கிராதமூர்த்தி” என்னும் பெயரில் வேடன் வடிவில் அருளுகிறார். திருஞான சம்பந்தர் தன் அடியார்களுடன் இப்பகுதிக்கு வந்த போது, வேறொரு மதத்தை சேர்ந்தவர்கள் அவரைத் தடுத்தனர். இதனால் வருந்திய சம்பந்தர், இறைவனிடமே இதுபற்றி முறையிட்டு பாடினார். இறைவனின் கட்டளையால் தடுத்தவர்களின் தலையில் இடி விழுந்தது. ஆனாலும், அவர்கள் திருந்தவில்லை. “சாரிபுத்தன்” என்பவரின் தலைமையில் சம்பந்தருடன் தங்கள் மதமே உயர்ந்தது என்றும், சைவம் தாழ்ந்தது என்றும் வாதிட்டனர். இதை மறுத்து சம்பந்தர் பேசி, அவர்களது வாதத்தை முறியடித்தார். பின்னர் அந்த தரப்பினரும் சைவர்களாக மாறினர்.
அம்பரீஷ ராஜா இத்தல இறைவனை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றார். இதனால் இத்தல இறைவனுக்கு “இராஜலிங்கம்” என்ற பெயரும் உள்ளது. பல்குணன் வழிபட்டதால் “பல்குணன்” என்றும், சூரியன் வழிபட்டதால் “பாஸ்கர இலிங்கம்” என்றும் திருநாமங்கள் உண்டு.
இத்தலம் கிருதயுகத்தில் பிரம்மவனம் என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் என்றும், துவாபர யுகத்தில் ஆனந்தவனம் என்றும், கலியுகத்தில் முக்தி வனம் என்றும் அழைக்கப்படுகிறது.