Monthly Archives: July 2011
அருள்மிகு சரஸ்வதி கோவில், வடக்கன்பரவூர்
அருள்மிகு சரஸ்வதி கோவில், வடக்கன்பரவூர், எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.
+91- 484-552 6710 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சரஸ்வதி |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | வடக்கன்பரவூர் |
மாவட்டம் | – | எர்ணாகுளம் |
மாநிலம் | – | கேரளா |
பரவூர் தம்பிரான் என்ற மூகாம்பிகை பக்தர், மாதம் ஒருமுறை கொல்லூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கம். வயதான காலத்தில் இவரால் கொல்லூர் செல்ல முடியவில்லை.
மிகவும் வருத்தத்துடன் இருந்த அவரது கனவில் மூகாம்பிகை தோன்றி,”நீ இருக்கும் இடத்தருகே ஒரு கோயில் கட்டு. அங்கு நான் கலைவாணியாக அமர்ந்து அருள்பாலிக்கிறேன்“என்றாள்.
அதன்படி தாமரைப் பூக்கள் அடங்கிய குளம் அமைக்கப்பட்டு, நடுவில் சரஸ்வதிக்கு கர்ப்பக்கிரகம் அமைக்கப்பட்டது.
கன்னிமூலையில் கணபதி, பிரகாரத்தில் சுப்ரமணியர், விஷ்ணு, யட்க்ஷி, ஆஞ்சநேயர், வீரபத்திரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர்
அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர்– 609 503. திருவாரூர் மாவட்டம்.
+91-4366-238445,+04366- 239909, 9444635427, 9976215220 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சரஸ்வதி |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | கூத்தனூர் |
மாவட்டம் | – | திருவாரூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, “இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான் பெருமையடைகிறது,” என்றாள். பிரம்மாவோ, தான் படைக்கும் தொழிலைச் செய்வதால்தான் பெருமையடைகிறது என்றும், தனது துணைவி என்பதாலேயே சரஸ்வதி பெருமையடைகிறாள் என்றும் சொன்னார்.
இருவருக்கும் இதுகுறித்து வாதம் ஏற்பட்டது. இது பெரும் பிரச்னையாகி, பிரம்மனும் சரஸ்வதியும் ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். இதனால் இருவரும் பூலோகத்தில் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் அந்தண தம்பதியினருக்கு, பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். இவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் இவர்களுக்கேற்ற வரன் தேடினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது.
சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். தம்பதிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டால், இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டவே இப்படி ஒரு நாடகத்தை உலகத்தின் முன்னால் அவர்கள் நடத்திக்காட்டினர்.
பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி,”இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாகக் கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்கு” என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக இக்கோயிலில் இவள் அருள்பாலிக்கிறாள்.