Monthly Archives: July 2011

அருள்மிகு வடக்கூர் அம்மன், மணமேல்குடி

அருள்மிகு வடக்கூர் அம்மன், மணமேல்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

பத்தினியாக வாழ்ந்த நல்லதங்காள், வறுமையின் கொடுமையால் தன் குழந்தைகளைக் கிணற்றில் வீசி, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தை சொல்லில் வடிக்க இயலாது. கடும் பஞ்சம் தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில், குடிக்கக்கூட தண்ணீர் இன்றி மனிதர்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். சுமார் பன்னிரண்டு வருடங்கள் மக்களைக் இப்பஞ்சம் வாட்டியதாம். இந்த காலகட்டத்தின் இறுதி ஆண்டில்தான் நல்லதங்காள் இறந்தாள்.

இதே ஆண்டில், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைச் சீமையில் அந்த அதிசயம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்குக் கிழக்கே 37-வது கி.மீ. தூரத்தில் உள்ளது மணமேல்குடி. பெயருக்கு ஏற்றாற்போல் திரும்பிய பக்கமெல்லாம் மணல்.

இந்த ஊர், கிழக்கு கடற்கரையை உச்சி முகர்ந்தபடி உள்ளது. கிராமமா, நகரமா என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி இருக்கும் இந்த ஊரின் வடக்குத் திசையில் இருக்கும் ஒரு பகுதியை, வடக்கு மணமேல்குடி என்றும் வடக்கூர் என்றும் சொல்கிறார்கள்.

முற்காலத்தில், இந்தப் பகுதி(வடக்கூர்) இலுப்பை மரக் காடாக இருந்தது. புதர்கள் நிறைந்த இந்த வனத்துக்குள் எவரும் போக மாட்டார்கள்.

அருள்மிகு வன துர்க்கை கோயில், கதிராமங்கலம்

அருள்மிகு வன துர்க்கை கோயில், கதிராமங்கலம், தஞ்சை மாவட்டம்

04364 232555 / 232999, 094422 11122, 094432 61999, 094867 67735, 094430 71765(மாற்றங்களுக்குட்பட்டவை)

முன்னொரு காலத்தில் மகிஷாசுரன் என்ற அசுரன் அனைவரையும் துன்புறுத்திக் கொண்டு இருந்தான். அவன் பெற்று இருந்த வரங்களினால் அவனை யாராலும் அழிக்க முடியவில்லை. அவன், அப்படி ஒரு வரத்தைப் பெற்று இருந்தான். அவனுடன் சும்பன், நிசும்பன் போன்ற அசுரர்களும் இருந்தார்கள். அந்த அசுரர்கள் அனைவரும் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள். அந்த அசுரர்களின் கொடுமைகள் தாங்க முடியாமல் போன தேவர்கள், பிரும்மாவுடன் சேர்ந்து திருமாலை சந்திக்கச் சென்றார்கள். அப்போது அவர் யோகநித்திரையில் இருந்தார். அங்கு தேவர்களுடன் சென்ற பிரும்மா, மகிஷாசுரனினால் ஏற்பட்டுள்ள தொல்லைகளை விளக்கமாக எடுத்துக் கூற, அதைக் கேட்ட திருமால் வந்தவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு சிவனிடம் சென்றார். சிவபெருமானும் கோபமுற்றனர். திருமால், சிவன் ஆகியோரின் உடம்பில் இருந்து வெளிவந்த கோபக் கனல் இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய ஒளியை தோற்றுவித்தது. சிறிது நேரத்தில் அந்த ஒளியில் இருந்து, பல ஆயுதங்களையும் கையில் ஏந்திய சாந்தமான முகத்தைக் கொண்ட ஒரு பெண் வெளியே வந்தாள். வெளிவந்தவள்,”நான்தான் காத்தாயி எனும் துர்க்கை. நான் அனைத்து கடவுள்களையும் படைத்த பரப்பிரும்மத்தின் உருவம். நான் எவராலும் படைக்கப்படவில்லை. நான், அனைவரது சக்தியினாலேயே தன்ன்னாலே இயற்கையாக உருவானவள். எனவே, நான் இந்த பூமியில் பிறந்தவர்களால் அழிக்க முடியாத அந்த மகிஷாசுரனை அழிக்க இயற்கையாகத் தோன்றி வந்துள்ளேன்என்றாள். தேவர்கள் மகிழ்ந்தனர். எல்லோரும் தங்களிடமிருந்த ஆயுதங்களை அவளிடம் கொடுத்து அந்த அசுரனை அழிக்க வேண்டினார்கள். அவளும் அரக்கர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அவர்களை அழிக்க கிளம்பினாள்.