Monthly Archives: July 2011
அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருநகரி
அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருநகரி-609 106, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91-4364-256 927, 94433 72567 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அழகிய சிங்கர்(இலட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம் |
உற்சவர் | – | திருவாலி நகராளன் |
தாயார் | – | பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி) |
தல விருட்சம் | – | வில்வம் |
தீர்த்தம் | – | இலாட்சணி புஷ்கரிணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | ஆலிங்கனபுரம் |
ஊர் | – | திருவாலி |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது, இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம்(அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் “திருஆலிங்கனம்” என்ற பெயர் பெற்று “திருவாலி” (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. குலசேகர ஆழ்வார் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். ஆலிநாட்டின் குறுநில மன்னனாகத் திருமங்கை ஆழ்வார் திகழ்ந்தார். எனவே அவருக்கு “ஆலிநாடன்” என்ற பெயர் உண்டாயிற்று.
அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்
அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்– 676 301, மலப்புரம் மாவட்டம், கேரளா மாநிலம்.
+91- 494 – 260 2157 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாவாய் முகுந்தன் (நாராயணன்) |
தாயார் | – | மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி) |
தீர்த்தம் | – | கமல தடாகம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருநாவாய் |
மாவட்டம் | – | மலப்புரம் |
மாநிலம் | – | கேரளா |
முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப்பூக்களை பறித்து பெருமாளை பூஜித்து வந்தனர். இதில் ஒருமுறை கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் பெருமாளிடம் தனது நிலையைக் கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் இலட்சுமி தேவியை அழைத்து, “இனிமேல் பூப்பறிக்க வேண்டாம். கஜேந்திரனுக்காக விட்டுக்கொடு” என்று கூறினார். இலட்சுமியும் அதன்படி செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் தினமும் ஏராளமான பூக்களைப்பறித்து, பெருமாளை அர்ச்சித்து வந்தான். பூஜையின் போது பெருமாள், இலட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது. கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் இலட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.