Monthly Archives: June 2011

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர் கரூர் மாவட்டம்.
***********************************************************************

+91-4324- 246 0146 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்(மகாமாரி)

பழமை: – 100 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – கருவூர்

ஊர்: – கரூர்

மாவட்டம்: – கரூர்

மாநிலம்: – தமிழ்நாடு

இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.

கிரமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இத்திருக்கோயில் தற்சமயம் உள்ள இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல உள்ள பெரியதொரு வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.

அருள்மிகு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள்.

பூச்சொரிதல்:

இக்கோயிலில் விசேச அபிசேக ஆராதனையுடன் கம்பத்துக்குத் தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதப் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில், சிறுகுடி

அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில், சிறுகுடி– 624 404, திண்டுக்கல் மாவட்டம்
****************************************************************************************************

மூலவர்: – முத்தாலம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – சிறுகுடி

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய நாட்டில் தெய்வ வழிபாடும் பக்தியும் கொண்டு, நீதி,நேர்மை நிலைக்க அரசாட்சி மேற்கொண்டு வந்தார் மாமன்னர் திருமலை நாயக்கர். இவரின் கீழ், நத்தத்தைத் தலைநகராக்கி ஆட்சி செலுத்திய ஜமீன் சருகு துந்துமி லிங்கமநாயக்கரின் முயற்சியால் சிறுகுடியில் இக்கோயில் கட்டப்பட்டது. ஐயனார் மலையில் மணக்கோலத்தில் மலையலங்கார சுவாமியையும் செம்பாயி அம்மனையும் மற்றும் பரிவார தெய்வங்களையும் மண்ணினால் செய்து கட்டப்பட்டது. இதற்குப் பராமரிப்புக்காக நில புலன்களை மானியம் கொடுத்து திருப்பணியை நிறைவேற்றினர்.

சிறுகுடி, பசுமை நிறம் கொண்ட மலைகளால் சூழப் பட்டது. வாழை, மா, தென்னை நிறைந்து பயன் தரும் சோலைகள் நிறைந்தது. இங்கு வான் மழை முறையாக பெய்யும். நீர் வளம் சேரப்பெற்றதால் நிலவளம் நிறைந்தது. இவ்வாறு திகழும் இவ்வூரின் மையப்பகுதியில் அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது.