Monthly Archives: June 2011
அருள்மிகு லலித செல்வாம்பிகை(செல்லப்பிராட்டி) அம்மன் கோயில், செஞ்சி
அருள்மிகு லலித செல்வாம்பிகை(செல்லப்பிராட்டி) அம்மன் கோயில், செஞ்சி
************************************************************************************
+94440 67172 (மாற்றங்களுக்குட்பட்டது)
திறக்கும் நேரம்: காலை 6 – 11 மணி, மாலை 4 – 8.30 மணி.
துர்க்கை, இலட்சுமி, சரசுவதி ஆகிய முப்பெரும் தேவியரும் தனித்தனியாகவும், ஒரு சில இடங்களில் சேர்ந்தும் அருள்பாலிக்கும் கோயில்கள் சில உண்டு. ஆனால், ஒரே விக்ரகத்தில் மூன்று தேவியரின் அம்சங்களும் இணைந்திருப்பதைத் தரிசிக்க வேண்டுமானால் செஞ்சி செல்லப்பிராட்டி லலித செல்வாம்பிகை அம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும். ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பு.
தல வரலாறு:
தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேட்டி யாகம் நடத்தினார். யாகத்தின் பலனாக ராமபிரான் அவதரித்தார். இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் ரிசியசிருங்க முனிவர். இவர் காசியப முனிவரின் மகனான விபாண்டகருக்கு பிறந்தவர். இவரிடம் ஒரு கற்பலகை இருந்தது. அதில் தேவியின் பீசமந்திரங்கள் எழுதப்பட்டிருந்தது. இந்த பலகை ரிசியசிருங்கர் மூலம் இங்கு வந்துள்ளது. அதற்கு “லலித செல்வாம்பிகை“ என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் கற்பலகையை பிரதிட்டை செய்து, கீழே அம்பாள் விக்ரகம் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் காஞ்சிக்கு செல்லும் போது, அவருக்கு இத்தல அம்மன் காட்சி கொடுத்து வழி கூறியதாக கூறப்படுகிறது. ரிசியசிருங்கரின் விக்ரகமும் இங்குள்ளது.
கற்பலகையின் வடிவமைப்பு:
மூலவராக வணங்கப்படும் அம்மன் கற்பலகை வடிவில் இருக்கிறாள்.
ஒரு காலத்தில், கற்பலகைகளில் மந்திரங்களை எழுதிக் கடவுளாக வழிபட்டனர். எனவே, இத்தலம் காலத்தால் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. கற்பலகை, 4 அடி உயரமும், செவ்வக வடிவமும் கொண்டது. பலகையில் 12 சதுரக்கட்டங்கள் உள்ளன. இந்தக் கட்டங்களைச் சுற்றி, உலக நாயகியான ஆதிபராசக்தியின் பீசாட்சர மந்திரத்தின் சூட்சும எழுத்துக்கள் உள்ளன. நடுவில் திரிசூலம் உள்ளது. வலது மேல் பக்கத்தில் சூரியனும், இடது மேல் பக்கத்தில், சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக முப்பெரும் தேவியரின் அம்சங்களையும் ஒருங்கிணைத்து, அம்மனின் திருவுருவம் ஓவிய வடிவில் உள்ளது. ஆயினும், உருவ வழிபாடு கருதி, கற்பலகைக்கு கீழே 3 அடி உயரத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில், திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்)
அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில், திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்), வேலூர் – 632 055, வேலூர் மாவட்டம்
*************************************************************************************************************
+0416 227 1855, 227 1202 (மாற்றங்களுக்குட்பட்டவை)
சிதம்பரம் நடராசர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி, பழநி முருகன், புதுச்சேரி மணக்குள விநாயகர், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பல பெரிய கோயில்களில் கருவறை விமானங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களுக்குப் பொற்கோயில் உள்ளது.
பச்சைப்பசேலென்று பரந்து விரிந்த புல்வெளியினூடே கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது ஸ்ரீநாராயணி ஆலயம்.
வேலூர் ஸ்ரீபுரம் “லட்சுமி நாராயணி” கோயில் 5ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது. 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
ஏழுமலையானின் பார்வையில் திருமகள்
வேலூர் மகாலட்சுமி, திருமலையில் அருளும் திருப்பதி வெங்கடாசலபதியின் கடைக்கண் பார்வைபடும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறாள். ஆரம்பகாலத்தில், இப்பகுதி திருமலைக்கோடி என்று அழைக்கப்பட்டது. மகாலட்சுமி கோயில் கட்டியபிறகு “ஸ்ரீபுரம்” என்று பெயர் மாற்றப்பட்டது. “ஸ்ரீ” என்பது மகாலட்சுமியை குறிக்கும். திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிப்பவர்கள், அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணி பீடத்தையும் தரிசிப்பது அவசியம்.