Monthly Archives: June 2011

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர் – 613 501 தஞ்சாவூர் மாவட்டம்.
*************************************************************************************************

+91- 4362- 267740 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 – இரவு 9 மணி. ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 3 – இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்(முத்துமாரி), துர்க்கை

தல விருட்சம்: – வேம்புமரம்

தீர்த்தம்: – வெல்லக் குளம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – புன்னைவனம்

ஊர்: – புன்னைநல்லூர்

மாவட்டம்: – தஞ்சாவூர்

மாநிலம்: – தமிழ்நாடு

கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டு வந்தான்.

தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து வணங்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம் – 624401, திண்டுக்கல் மாவட்டம்.
****************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – இரசம்மாநகரம்

ஊர்: – நத்தம்

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

லிங்கம நாயக்கன் இப்பகுதியை ஆண்டு வந்த போது, அரண்மனைக்குப் பால் கொண்டு வருவபர் தினமும் பாலைக் கறந்து குறிப்பிட்ட இடத்தில் வைத்தவுடன் பால் குடம் காணாமல் போய்க் கொண்டே இருந்தது.

மன்னனுக்குத் தகவல் தெரிந்து, அந்த இடத்தைப் பார்வையிட்டான். அந்த இடத்தில் சிலை ஒன்று மண்ணில் மறைந்திருப்பது கண்டு கடப்பாறை கொண்டு தோண்ட உத்தரவிட்டான்.

தோண்டும் போது அம்மன் தோளில் கடப்பாறை பட்டுவிட்டதால் ரத்தம் பீறிட்டது. அச்சிலையை எடுத்து மஞ்சள் நீராட்டி அந்த இடத்திலேயே லிங்கம நாயக்கன் பிரதிட்டை செய்தான். ரத்தம் பீறிட்டு வெளிவந்த அம்மன் இருப்பதால் அவ்வூரின் பெயர் ரத்தம்என்றாகிக் காலப்போக்கில் நத்தம்என்று அழைக்கப்பட்டது.

மூலவராக உள்ள அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து காலில் அசுரனை மிதித்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத சிறப்பு.