Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (பேயாழ்வார்) திருக்கோயில், மயிலாப்பூர்
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (பேயாழ்வார்) திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை மாவட்டம்.
+91-44 2464 3873, 2494 3873, 94440 35591 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதிகேசவப்பெருமாள் | |
உற்சவர் | – | ஆதிகேசவர் | |
தாயார் | – | மயூரவல்லி | |
தல விருட்சம் | – | அரசு | |
தீர்த்தம் | – | சந்திர புஷ்கரிணி (சர்வ தீர்த்தம்) | |
ஆகமம் | – | வைகானசம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மயூரபுரி | |
ஊர் | – | மயிலாப்பூர் | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திரேதாயுகத்தில் இத்தலத்தில் உள்ள கைரவிணி புஷ்கரிணியின் கரையில் மகரிஷிகள் யாகம் நடத்தினர். மது என்ற அசுரன், யாகம் நடக்க விடாமல் தொந்தரவு செய்தான். இதனால், மகரிஷிகள், அசுரனை அழித்து யாகம் நடத்திட அருளும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர்களுக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, அசுரனை அழிப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும், யாகத்தை தொடர்ந்து நடத்தும்படி கூறினார். அதன்படி மகரிஷிகள், யாகத்தை தொடர்ந்தனர். அசுரன் அங்கு வந்தான். அப்போது, மகாவிஷ்ணு யாகத்தில் இருந்து தோன்றி, அசுரனை அழித்தார். பின்பு, மகரிஷிகளின் வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார். இவரே இத்தலத்தில், “ஆதி கேசவப்பெருமாள்” என்ற பெயரில் அருளுகிறார்.
முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான, பேயாழ்வார் அவதரித்த தலம் இது. திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான நந்தகம் என்னும் வாள், மகாலட்சுமியிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டியது. ஒப்புக்கொண்ட மகாலட்சுமி, அந்த வாளைப் பூலோகத்தில் பிறந்து மகாவிஷ்ணுவை வணங்கும்படியும், அதன்பின் தான் உபதேசம் செய்வதாகவும் கூறினாள். அதன்படி நந்தகம் (வாள்), இங்குள்ள மணி கைரவிணி தீர்த்தத்தில் மலர்ந்த அல்லி மலரில் அவதரித்தது. இவர் “மகதாஹ்வயர்” என்று பெயர் பெற்றார். இத்தலத்தில் பெருமாளுக்குத் தினசரி பூமாலை அணிவித்து சேவை செய்த இவருக்கு, மகாலட்சுமி உபதேசம் செய்தாள். பெருமாள் மீது அதீதமாக பக்தி கொண்டதால் இவர், “பேயாழ்வார்” என்று பெயர் பெற்றார்.
அருள்மிகு கல்யாண வரதராஜப்பெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை
அருள்மிகு கல்யாண வரதராஜப்பெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை, சென்னை, சென்னை மாவட்டம்.
+91- 99401 73559
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
கல்யாண வரதராஜர் |
உற்சவர் |
– |
|
பவளவண்ணர் |
தாயார் |
– |
|
பெருந்தேவி |
தல விருட்சம் |
– |
|
மகிழம் |
ஆகமம் |
– |
|
வைகானசம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
பத்மபுரம் |
ஊர் |
– |
|
காலடிப்பேட்டை |
மாவட்டம் |
– |
|
சென்னை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
முற்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கோலட்துரை என்பவர் இப்பகுதியை நிர்வகித்து வந்தார். அவரிடம் விஜயராகவாச்சாரியார் என்னும் பெருமாள் பக்தர் முக்கிய பொறுப்பில் பணியாற்றினார். தினமும் காஞ்சிபுரத்திலுள்ள பவளவண்ணப்பெருமாளைத் தரிசிப்பது இவரதுவழக்கம். பவளவண்ணரை வணங்காமல் எந்த வேலையையும் செய்ய மாட்டார். இவ்வாறு விஜயராகவர் தொடர்ந்து காஞ்சிபுரம் சென்றுவரவே, அவருக்காக கோலட்துரை இங்கு ஒரு பெருமாள் கட்டித் தந்தார். விஜயராகவர் இந்த பெருமாளை வணங்கி வந்தார். ஆனாலும், அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. மீண்டும் அவர் காஞ்சிபுரம் சென்றார். பவளவண்ணரை தரிசித்து இருப்பிடம் திரும்பினார். கோலட்துரை விசாரித்தபோது, விஜயராகவர் பவளவண்ணர் கோயிலின் உற்சவர் அழகில் மயங்கி, தினமும் காஞ்சிபுரம் செல்வதை அறிந்தார். எனவே, அத்தலத்திலுள்ள உற்சவரை இங்கு கொண்டு வந்தார். விஜயராகவர் சுவாமியை வணங்கினார். சுவாமி அவருக்கு காட்சி தந்து, “எனக்கு, திருமேனியில் எந்த வித்தியாசமும் கிடையாது. என்னை நினைக்கும் பக்தர்களின் உள்ளங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்” என்றார். உண்மை உணர்ந்த விஜயராகவாச்சாரியார் தன் வாழ்நாள் முழுதும் இத்தலப் பெருமாளுக்கு சேவை செய்தார். இவ்வாறு பக்தருக்காக, பெருமாள் காட்சி தந்த தலம் இது. இங்கு சுவாமி வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.