Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு சௌந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு
அருள்மிகு சௌந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல் மாவட்டம்.
+91- 451-255 7232 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சவுந்தர்ராஜ பெருமாள் |
தாயார் |
– |
|
சவுந்திரவல்லி |
தல விருட்சம் |
– |
|
வில்வ மரம் |
தீர்த்தம் |
– |
|
குடகனாறு நதி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
தாளமாபுரி |
ஊர் |
– |
|
தாடிக்கொம்பு |
மாவட்டம் |
– |
|
திண்டுக்கல் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
“மண்டூகம்” என்ற சொல்லின் பொருள் “தவளை.” ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். இதனால், அவர் “மண்டூக மகரிஷி” எனப் பெயர் பெற்றார். தன் சாப நிவர்த்திக்காக இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வேண்டித் தவமிருந்தார். அப்போது, அசுரன் ஒருவன் அவரை தொந்தரவு செய்யவே, அவனிடமிருந்து தன்னைக் காக்கும்படி மதுரையில் அருளும் கள்ளழகரை வேண்டினார். அவருக்கு அருளிய சுவாமி, அசுரனை அழித்தார். மேலும், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். “சவுந்தரராஜர்” என்றும் திருநாமம் பெற்றார். மதுரை அழகர் கோயிலுக்கு இணையான சிறப்பை பெற்ற இத் திருத்தலத்தை 500 வருடங்களுக்கு முன்பு விஜய நகர ஆட்சி வழி வந்த அட்சுத தேவராயர் கட்டியதாக வரலாறு கூறுகிறது. மதுரை அழகர்கோயிலுக் குண்டான நேர்த்திக்கடனை இங்கே செலுத்தலாம்.
இக்கோயிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர். திருவோணத்தன்று ஹயக்ரீவருக்குத் தேனபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது. படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுகுறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது. அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடக்கிறது. இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் விசேஷ மானவர். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். இத்தகைய அமைப்பைக் காண்பதுஅபூர்வம். விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், பெருமாளின் தசாவதாரம், இலட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர், சொர்ண பைரவர் ஆகியோருக்கும் சன்னதி உண்டு.
அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில், கோட்டைப்பட்டி
அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில், கோட்டைப்பட்டி, பழைய வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டம்.
+91 98658 26387 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சென்றாயப்பெருமாள் |
உற்சவர் |
– |
|
சென்றாயப்பெருமாள் |
தாயார் |
– |
|
ருக்மிணி, சத்யபாமா |
தல விருட்சம் |
– |
|
உசிலை மரம் |
தீர்த்தம் |
– |
|
கிருஷ்ணர் தெப்பம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
கோட்டைப்பட்டி |
மாவட்டம் |
– |
|
திண்டுக்கல் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
கிருஷ்ண தேவராயர் வம்சாவளியைச் சேர்ந்த ஆதிசென்னம்ம நாயக்கர் என்ற பெருமாள் பக்தர் இவ்வூரில் வசித்து வந்தார். இங்குள்ள குன்றில் பசுக்களை மேய்ப்பது அவரது வழக்கம். ஒருசமயம் பசு மேய்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்பியபோது ஒரு பசு மட்டும் இல்லாதைக் கண்டார். எனவே, பசுவைத்தேடிக் குன்றுக்கு வந்தார். ஓரிடத்தில் அந்த பசு நின்றிருக்க, அதன் மடியில் சிறுவன் ஒருவன் பால் பருகிக் கொண்டிருந்ததைக் கண்டார். குட்டி போடாத பசுவிடம் சிறுவன் பால்குடிப்பதைக் கண்டவருக்கோ ஆச்சர்யம். இது இறைசெயலாகவே இருக்க வேண்டுமெனக் கருதியவர் மறைவாக நின்று கொண்டார். அப்போது சிறுவன் அவரை அழைத்து, பெருமாளாக சுயரூபம் காட்டினார். அவரிடம், தான் அந்த குன்றில் இருக்க விரும்புவதாகவும், அங்கு தனக்கு கோயில் எழுப்பும்படியும் உத்தரவிட்டார். அதன்படி, பக்தர் இங்கு அவருக்கு கோயில் எழுப்பினார். பக்தர்களுக்கு ஓடிச் சென்று அருள்புரிபவர் என்பதால் சுவாமிக்கு “சென்றாயப்பெருமாள்” என்ற திருநாமம் அமைந்தது.
சிறுவனாக வந்ததன் அடிப்படையில் பிரதான சன்னதியிலுள்ள சென்றாயப் பெருமாளை, பாலகராகவே வழிபடுகின்றனர். எனவே, உடன் தாயார்கள் கிடையாது. ஆனாலும் இவர் முறுக்கு மீசை, தாடியுடன் காட்சியளிப்பதும், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பு. இவரிடம் சங்கு, சக்கரம் கிடையாது. உற்சவர் ருக்மிணி, சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். சனிக்கிழமைகளில் இங்கு கிருஷ்ணலீலை, இராமாவாதாரம் பற்றிய பஜனைப் பாடல்கள் பாடுவர். ஓணம் பண்டிகையன்று இவருக்கு மூன்று நாள் யாகசாலையுடன் விசேஷ பூஜைகள் உண்டு. அன்று, ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கு அணிவித்த மாலையைக் கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிப்பர்.