Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு ஆதிகேசவரப்பெருமாள் சுவாமி திருக்கோயில், பவானி
அருள்மிகு ஆதிகேசவரப்பெருமாள் சுவாமி திருக்கோயில், பவானி – 638 301 ஈரோடு மாவட்டம்.
+91- 4256 – 230 192 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதிகேசவரப்பெருமாள் |
உற்சவர் | – | கூடலழகர் |
தாயார் | – | சவுந்திரவல்லி |
தல விருட்சம் | – | இலந்தை |
தீர்த்தம் | – | காவிரி, பவானி, அமிர்தநதி |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருநணா |
ஊர் | – | பவானி |
மாவட்டம் | – | ஈரோடு |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அசுரகுருவான சுக்கிரனின் பொறாமைக்கு ஆளான குபேரன், அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி, பூலோகத்தில் தலயாத்திரை சென்றான். அவன் இவ்வழியாக சென்றபோது புலி, மான், யானை, சிங்கம், பசு, நாகம், எலி என ஒன்றுக்கொன்று எதிரான குணங்களை உடைய விலங்கினங்கள் ஒரே இடத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தன. தேவர்கள், மகரிஷிகள், கந்தர்வர்கள் என பலர் தவம் செய்து கொண்டிருந்தனர். மிருகங்களும் அவர்களுக்கு தொந்தரவு தராமல் அமைதியாக இருந்தன. அதைக்கண்ட ஆச்சர்யமடைந்த குபேரன், கொடிய மிருகங்களும் அமைதியாக இருக்கும் இத்தலம் புனிதம் வாய்ந்ததாகத்தான் இருக்க வேண்டுமென எண்ணினான். இவ்விடத்தில் திருமால், சிவனை தரிசிக்க விரும்பித் தவம் செய்தான். இருவரும் அவனுக்கு காட்சி தந்தனர். குபேரன் அவர்களிடம், “புனிதமான இந்த இடத்தில் தனக்கு அருளியது போலவே எப்போதும் எல்லோருக்கும் அருள வேண்டும்” என வேண்டினான். அவனுக்காக சிவன் சுயம்புவாக எழுந்தருளினார். திருமாலும் அருகிலேயே தங்கினார்.
ஆதிகேசவர் சன்னதிக்கு முன்புறம் வேணுகோபாலர் இராதா, இருக்குமணியுடன் தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இவருக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு இரண்டு தலைகளுடன் பசு காட்சியளிப்பது வித்தியாசமான அமைப்பு ஆகும்.
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆலத்தியூர், மலப்புறம்
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆலத்தியூர்– 676 102. மலப்புறம். கேரளா.
காலை 5 மணி முதல் 10மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ராமர், ஆஞ்சநேயர் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | ஆலத்தியூர் |
மாவட்டம் | – | மலப்புரம் |
மாநிலம் | – | கேரளா |
கேரளமாநிம் ஆலத்தியூரில் அமைந்துள்ள இந்த ஆஞ்சநேயர் கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். கோயிலின் கருவறையில் இராமபிரான் சீதையில்லாமல் தனியாக, தோற்றத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கிறார்.
இராமன், சீதையைத் தேடிப்போகும் உத்தம பக்தனான அனுமனுக்கு சீதையின் அடையாளங்களை சொல்லிக்கொடுக்கும்போது, அதைக் கேட்கும் தோற்றத்தில் தான் அனுமன் உள்ளார்.
கருவறையின் பக்கத்தில் அமைந்துள்ள கோயிலில் அனுமான் வீற்றிருக்கிறார். இராமபிரான் சொல்லும் ரகசியத்தை தலை சாய்த்து கேட்கும் ஆஞ்சநேயருக்கு முப்பத்தி முக்கோடி தேவர்களும் தங்களது சக்தியைக் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.