Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு வன துர்க்கை கோயில், கதிராமங்கலம்
அருள்மிகு வன துர்க்கை கோயில், கதிராமங்கலம், தஞ்சை மாவட்டம்
04364 232555 / 232999, 094422 11122, 094432 61999, 094867 67735, 094430 71765(மாற்றங்களுக்குட்பட்டவை)
முன்னொரு காலத்தில் மகிஷாசுரன் என்ற அசுரன் அனைவரையும் துன்புறுத்திக் கொண்டு இருந்தான். அவன் பெற்று இருந்த வரங்களினால் அவனை யாராலும் அழிக்க முடியவில்லை. அவன், அப்படி ஒரு வரத்தைப் பெற்று இருந்தான். அவனுடன் சும்பன், நிசும்பன் போன்ற அசுரர்களும் இருந்தார்கள். அந்த அசுரர்கள் அனைவரும் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள். அந்த அசுரர்களின் கொடுமைகள் தாங்க முடியாமல் போன தேவர்கள், பிரும்மாவுடன் சேர்ந்து திருமாலை சந்திக்கச் சென்றார்கள். அப்போது அவர் யோகநித்திரையில் இருந்தார். அங்கு தேவர்களுடன் சென்ற பிரும்மா, மகிஷாசுரனினால் ஏற்பட்டுள்ள தொல்லைகளை விளக்கமாக எடுத்துக் கூற, அதைக் கேட்ட திருமால் வந்தவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு சிவனிடம் சென்றார். சிவபெருமானும் கோபமுற்றனர். திருமால், சிவன் ஆகியோரின் உடம்பில் இருந்து வெளிவந்த கோபக் கனல் இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய ஒளியை தோற்றுவித்தது. சிறிது நேரத்தில் அந்த ஒளியில் இருந்து, பல ஆயுதங்களையும் கையில் ஏந்திய சாந்தமான முகத்தைக் கொண்ட ஒரு பெண் வெளியே வந்தாள். வெளிவந்தவள்,”நான்தான் காத்தாயி எனும் துர்க்கை. நான் அனைத்து கடவுள்களையும் படைத்த பரப்பிரும்மத்தின் உருவம். நான் எவராலும் படைக்கப்படவில்லை. நான், அனைவரது சக்தியினாலேயே தன்ன்னாலே இயற்கையாக உருவானவள். எனவே, நான் இந்த பூமியில் பிறந்தவர்களால் அழிக்க முடியாத அந்த மகிஷாசுரனை அழிக்க இயற்கையாகத் தோன்றி வந்துள்ளேன்” என்றாள். தேவர்கள் மகிழ்ந்தனர். எல்லோரும் தங்களிடமிருந்த ஆயுதங்களை அவளிடம் கொடுத்து அந்த அசுரனை அழிக்க வேண்டினார்கள். அவளும் அரக்கர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அவர்களை அழிக்க கிளம்பினாள்.
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் – 641301, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91 – 4254 – 222 286 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வனபத்ர காளியம்மன் |
தல விருட்சம் | – | தொரத்திமரம் |
தீர்த்தம் | – | பவானி தீர்த்தம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோயில்.
சாகா வரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூசை செய்து சூரனை அழித்ததாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால், இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. இது தவிர ஆரவல்லி சூரவல்லி கதையோடும் இக்கோயில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி ஆகியோரை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு, பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு, பாண்டவர்கள், அப்பெண்களை அடக்க, தங்களின் தங்கை மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.