Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
பெரியாண்டவர் ஆலயம், திருநிலை
அருள்மிகு பெரியாண்டவர் ஆலயம், திருநிலை, ஓரகடம் போஸ்ட், திருக்கழுகுன்றம் வழி, செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91-9842740957
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவத்தலம் திருக்கழுக்குன்றம். இதன் வடகிழக்கே 8 கிமீ தூரத்திலும், முருகன் அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த தலமான திருப்போரூரில் இருந்து மேற்கு திசையில் 12 கிமீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கிமீ தூரத்திலும், மலைகளால் சூழப்பட்ட, பசும்சோலைகள் நிறைந்து, இயற்கை எழில் மிக்க, திருநிலை கிராமத்தில் குளம் மற்றும் ஏரியின் மத்தியில் சுயம்பு இலிங்கமாக தோன்றி, சிவபெருமான், பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். எம்பெருமானைச் சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சியை இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாது.
பட்டீஸ்வரர் திருக்கோயில், பேரூர்
அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில், பேரூர், கோவை மாவட்டம்.
காலை 6 மணி முதல் 1மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பட்டீஸ்வரர் | |
அம்மன் | – | பச்சைநாயகி, மனோன்மணி | |
தல விருட்சம் | – | புளியமரம், பனைமரம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பேரூர் | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பிரம்மனைப்போல படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என விரும்பிய காமதேனு, சிவனை நோக்கி கடும் தவம் இருந்தது. இத்தலத்தில் புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. காமதேனுவின் கன்றான “பட்டி” விளையாட்டாக தன் காலால் புற்றை உடைத்து விட்டது.