Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர்

அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர், (திருப்பேரையூர்) நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.

+91- 4367 – 237 692 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஜகதீஸ்வரர்
அம்மன் ஜகன் நாயகி (பெண்ணமிர்த நாயகி)
தல விருட்சம் நாரத்தை மரம்
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பேரெயில், ஓகைப்பேரெயில்
ஊர் ஓகைப்பேரையூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் அப்பர்

சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது, அதைச்சார்ந்த கோட்டை இருந்தது என்றும், அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் பேரெயிலூர்என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி பேரையூர்என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து.

இவ்வூரில் தோன்றிய பெண் புலவர், பேரெயில் முறுவலார் பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன.

இத்தலத்தில் உள்ள சபாபதி (நடராஜர்) பிற தலங்களை விட மிக அழகாக விளங்குவதாக தல வரலாறு கூறுகிறது.

இத்தல முருகப்பெருமானுக்கு சித்திரை சஷ்டியில் திருவிழா நடக்கிறது. திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகை திருப்பதிகம் ஒன்றைப்பெற்ற தலம்.

அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர்

அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், செல்லூர், குடவாசல் வழி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 262 239 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வில்வாரண்யேஸ்வரர் (வில்வநாதர், திருக்கொள்ளம்பூதூருடையார்)
அம்மன் சவுந்தர நாயகி (அழகிய நாச்சியார்)
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பிரம்ம, அக்னி, கங்கா தீர்த்தம்
ஆகமம் காமிக ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கூவிளம்பூர், செல்லூர், திருக்களம்பூர்
ஊர் திருக்கொள்ளம்புதூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

பல சிவத்தலங்களைத் தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து, அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, “கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனேஎனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து, மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.

பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். “கூவிளம்புதூர்என்ற பெயர் மருவி காலப்போக்கில் கொள்ளம்புதூர்ஆனது.