Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு குருசாமி அம்மையார் திருக்கோயில், கண்டமங்கலம்

அருள்மிகு குருசாமி அம்மையார் திருக்கோயில், கண்டமங்கலம், அரியூர், புதுச்சேரி மாவட்டம்.

+91 94866 23409, 98848 16773

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குருசாமி அம்மையார்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கண்டமங்கலம்
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுசேரி

1890-ல் இருந்து 1895 வரை இந்தப் பகுதியில் குருசாமி வசித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி, சுதந்திர காலத்துக்கு முன் அதாவது 1947-க்கு முன் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்ததாம். மேலே சொன்னபடி இரண்டு மாநிலத்துக்கும் இது எல்லையாக அமைந்தமையால், இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்துக்கு அருகே புதுவை எல்லையில் பிரெஞ்சுப் படையும், தமிழக எல்லையில் பிரிட்டிஷ் படையும் தனது வீரர்களை நிறுத்திக் காவல் காத்து வந்ததாம். எனவே, இரண்டு படைகளும் நிரந்தர முகாமிட்டிருக்கும் இடத்துக்கு அருகே உள்ள குருசாமி அம்மையார் ஜீவ சமாதி எவருக்கும் புலப்படவில்லை. இந்தப் பகுதி வழியாகப் பயணிப்போர் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று இங்கே அமர்ந்தாலும், அவர்களை விரட்டி விடுவார்கள் இரண்டு படையினரும். காரணம் போராட்டக்காரர்களாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் எவரையும் இதன் அருகே நெருங்க விட மாட்டார்களாம். தமிழகப் பகுதிக்கு ஒரு வழியாக சுதந்திரம் கிடைத்த பின்னும், பிரெஞ்சுக் குடியரசின் ஒரு பகுதியாகவே புதுவைப் பிரதேசம் தொடர்ந்து வந்தது. எனவே, குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதியை நிம்மதியாகத் தரிசிக்க வரும் பக்தர்களை, பிரெஞ்சுப் படைகள் சந்தேகக் கண் கொண்டே பார்க்க ஆரம்பித்தது. எங்கே, தமிழகம் மாதிரி தங்களது கட்டுப்பாட்டில் உள்ள புதுவைப் பிரதேசத்திலும் ஏதேனும் கலகம் விளைவித்து விடுவார்களோ என்று பிரெஞ்சுப் படை பயந்தது. காலம் உருண்டோடியது. எல்லாப் படைகளும் தொலைந்தொழிந்த பின்னர்தான் இந்த ஜீவ சமாதி, ஒரு வெளிச்சத்துக்கு வந்தது என்று சொல்லலாம்.

அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம்

அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம், அந்தியூர், ஈரோடு மாவட்டம்.

+91 96773- 65525 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குருநாதசுவாமி
அம்மன் காமாட்சி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் புதுப்பாளையம்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் வனப்பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி, மூன்று குழவிக்கற்களை மட்டும் நட்டு வழிபட்டனர். இந்த கோயில் பூசாரி வீட்டுப் பெண்ணை, ஆற்காடு நவாப் திருணம் செய்ய விருப்பம் தெரிவித்துப் பெண் கேட்டுள்ளார். உறவினர்களிடம் கலந்து பின் சம்மதம் தெரிவிப்பதாக நவாபின் ஜவானிடம் பூசாரி கூறினார். உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அப்போது உறவினர் ஒருவருக்கு அருள்வந்து, “நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாக சென்றுவிடுங்கள்என்று கூறினார். பூசாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர். அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்கு சென்று பார்த்த போது யாரும் இல்லை. கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களை சேதப்படுத்தினர். கற்களுடன் சென்றவர்கள் பல ஊர் கடந்து பசியாலும், பட்டினியாலும் வாடி வதங்கினர். தங்களையே பாதுகாக்க இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்தனர். அடுத்தநாள் அனைவரும் புறப்பட்ட போது, தங்களுடைய கூடையில் மூன்று கல் சிலைகள் இருந்ததைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அவற்றைத் தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்தனர். அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் என்ற இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்தனர். பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று மூன்று கற்களையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநிலமன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார். காலப்போக்கில் மூன்று கற்சிலைகளுக்கும் பதிலாக, மூன்று உருவங்களை அமைத்து வழிபட முடிவு செய்தனர். அதன்படி முதல் கல்லைக் குலதெய்வமாக்கி காமாட்சி அம்மனாகவும், இண்டாவது கல்லை பெருமாளாகவும், மூன்றாவது கல்லை அப்பன் (சிவன்), மகன் (முருகன்) ஆகிய இருவரையும் இணைத்த நிலையில் குருநாதசுவாமி என்றும் பெயரிட்டனர். குரு என்றால் ஈஸ்வரன், நாதன் என்றால் முருகன். தெலுங்கு பக்தர்கள் இவரை பாலகுருநாதசுவாமி என்றும், உக்கிரகுருநாதர் என்றும் வணங்கி வருகின்றனர்.