Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு ஜோதி மவுனகுரு நிர்வாணசுவாமிகள் ஆலயம், கசவனம்பட்டி
அருள்மிகு ஜோதி மவுனகுரு நிர்வாணசுவாமிகள் ஆலயம், கசவனம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.
+91-451 2555 455, 97876 18855, 94865 02714
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மவுனகுருசாமி | |
உற்சவர் | – | மவுனகுருசாமி | |
பழமை | – | 100 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கசவனம்பட்டி | |
மாவட்டம் | – | திண்டுக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சில ஆண்டுகளுக்குமுன், 12 வயது சிறுவன் ஒருவன் இப்பகுதிக்கு வந்தான். ஆடை ஏதும் அணியாமல், நிர்வாணமாகவே இப்பகுதிகளில் சுற்றித் திரிந்தான். முதலில் சிறுவன்தானே, என கருதிய மக்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை. நாளடைவில் அவன், ஆடையே அணியாமல் எப்போதும் நிர்வாணமாகவே ஊருக்குள் வந்தான். இதைக்கண்ட சிலர், அவனுக்கு ஆடைகளை அணிவித்துப் பார்த்தனர். ஆனால், அவன் அதை கிழித்து எறிந்து விட்டான். இந்த உலகம் மாயை என்னும் போலியான ஆசைகளால் நிறைந்தது. இதில், அனுபவிக்க ஏதுமில்லை. இதைப் புரிந்து கொண்டாலே ஞானம் கிடைத்து விடும். இதை, தனது உருவத்திலேயே உணர்த்தியதால், போகப்போக மக்கள் மரியாதை கொடுத்து நடத்தினர். அவரது பெயர் தெரியாமல் முதலில் பெருமாள் சாமி என அழைத்தனர். எப்போதும் நிர்வாணமாகவே இருந்ததால், ஒருகட்டத்தில் நிர்வாணசுவாமி என்றே அழைத்தனர். அவர் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்ததால் பிற்காலத்தில் இவர் “மவுனகுரு நிர்வாணசுவாமிகள்” என அழைக்கப்பெற்றார். தன்னிடம் உபதேசம் பெற வந்தவர்களிடம்கூட, அவர் அதிகம் பேசியதில்லை. இங்கேயே முக்தியடைந்த இவருக்கு, சமாதிப்படுத்திய இடத்தில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
ஐப்பசி மாதம் ஐந்தாம் நாள், மூலம் நட்சத்திரத்தில், வெள்ளிக்கிழமையன்று (22.10.1982) இவர் முக்தி பெற்றார். இந்நாளில் குருபூஜை நடக்கும். மூன்று நாள் நடக்கும் விழாவில், தீர்த்தத்திற்கு சிறப்பு பெற்ற தலங்களில் இருந்து கொண்டு வந்த தீர்த்தத்தால், சுவாமிக்கு அபிஷேகம் செய்வர். மூலத்தன்று காலையில் விசேஷ அபிஷேகத்துடன், பூஜை உண்டு. பக்தர்கள் குருபூஜைக்கு முன்பாக, 48 நாள் விரதமிருந்து, இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். அன்று அன்னதானமும் உண்டு. சிவராத்திரியன்று இரவில் இங்குள்ள இலிங்கத்திற்கு நான்கு கால பூஜை நடக்கிறது.
அருள்மிகு இடும்பன் திருக்கோயில், பழநி
அருள்மிகு இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்.
+91- 4545-242 236 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | இடும்பன் | |
அம்மன் | – | இடும்பி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பழநி | |
மாவட்டம் | – | திண்டுக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இடும்பாசுரன். முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, இடும்பன் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான். சிறந்த சிவபக்தனாக விளங்கிய இடும்பனுக்கு அவனது மனைவி இடும்பி உற்றதுணையாக விளங்கினாள். இவர்கள் தங்கியிருந்த இடம் “இடும்ப வனம்” எனப்பட்டது. (தற்போது இந்தஇடம் திருத்துறைப் பூண்டியில் இருந்து 16 கி.மீ., தூரத்தில் உள்ளது) இந்நிலையில், அகத்தியர் தனது பூஜைக்காக சிவதி சொரூபங்களாக விளங்கும் சிவமலை மற்றும் சக்திதிமலை ஆகியவற்றை முருகப் பெருமானிடம் கேட்டார். முருகப்பெருமானும் அவற்றைத் தந்தருளினார். அவற்றை, கேதாரத்தில் உள்ள பூர்ச்சவனம் என்னுமிடத்தில் வைத்து வணங்கி வந்தார் அகத்தியர். இந்நிலையில் மலைகளை அங்கேயே வைத்து விட்டு பொதிகை செல்லும் நிலை ஏற்பட்டது. இடும்பன் வன சஞ்சாரம் செய்த போது, குற்றால மலையில் தங்கியிருந்த அகத்தியரைக் கண்டான். முருகப்பெருமானின் கருணையைப் பெற விரும்புவதாகக் கூறினான். அசுரகுருவாயினும் அவனது உயர்ந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகத்தியர், கேதாரத்திலுள்ள சிவமலை, சக்திமலையை “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தையும், பாவம் போக்கும் “அரோகரா” என்றும் முழங்கியபடியே பொதிகைக்கு கொண்டு வந்தால் முருகனின் தரிசனம் கிடைக்குமென்றார். இடும்பனும் இடும்பியும் அங்கு சென்று அம்மலையைத் தூக்க சிவனை வேண்டித் தவமிருந்தனர். அப்போது பிரமதண்டம் (கம்பு) ஒன்று தோன்றியது. அஷ்டதிக்கு நாகங்களும் அங்கே வந்தன. அவற்றை பிரமதண்டத்தில் உறிபோல் கட்டி, மலைகளை அதில் வைத்து காவடியாகச் சுமந்தபடி பொதிகை வரும் வழியில், திருவாவினன்குடி என்ற இடத்தில் பாரம் அதிகமாகவே அங்கே இறக்கி வைத்தான். இளைப்பாறிய பிறகு மீண்டும் தூக்கவே அவனால் முடியவில்லை. சிவமலையின் மீது ஒரு சிறுவன் ஏறி நின்று விளையாடிக் கொண்டிருந்தான். அவனது அழகைப் பார்த்ததுமே இடும்பன் அவனை ஒரு தெய்வப்பிறவி என்று நினைத்தான். மலையில் இருந்து இறங்கிவிடும்படி அவனைச் சொன்னான். அவன் மறுத்ததுடன், “இது நான் தங்கப்போகும் மலை” என்று வாதிட்டான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.