Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-96778 18114 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குபேரபுரீஸ்வரர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

குபேரன் தஞ்சாவூருக்கு பயணமாகி சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) கட்டப்படுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் தஞ்சபுரீஸ்வரர்எனப்பட்டார். இராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற பல சிவன் கோயில்களுக்கும் சென்றான். இறுதியில் தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் இக்கோயிலில் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இவ்வூருக்கு தஞ்சவூர்என்ற பெயர் எற்பட்டு காலப்போக்கில் தஞ்சாவூர்ஆனதாக தல புராணம் குறிப்பிடுகிறது. “குபேரபுரீஸ்வரர்என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.

பிரம்மாவின் மனதில் இருந்து புலஸ்தியர் என்ற மகன் தோன்றினார். இவருக்கு விச்வரஸ் என்ற மகன் பிறந்தார். விச்வரஸ் முனிவராயினும், சுமாலி என்ற அரக்கனின் மகள் கேகசியைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயின் குணநலத்துடன் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களே இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர். இதன் பின் விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர்.

அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில், கஞ்சமலை

அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில், கஞ்சமலை, சேலம் மாவட்டம்.

+91 – 427- 249 1389 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சித்தேஸ்வரர்
தீர்த்தம் காந்ததீர்த்த குளம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கஞ்சமலை
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டுக் கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர்.

கஞ்சம்என்றால் தாமரைஎனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் கஞ்சம்என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம்.

காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர். அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.