Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு சடையப்பர் திருக்கோயில், தென்செட்டி ஏந்தல்

அருள்மிகு சடையப்பர் திருக்கோயில், தென்செட்டி ஏந்தல், கல்வராயன் மலை, விழுப்புரம் மாவட்டம்.

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சடையப்பர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தென்செட்டி ஏந்தல்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

ஆங்கிலேயர்கள் காலத்தில் இக்கோயில் பூசாரியாக இருந்தவர் மீது ஒரு திருட்டு வழக்கு ஏற்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அந்த திருட்டு வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பூசாரி புலம்பியபடியே இருந்தார். இதைக் கவனித்த நீதிபதி பூசாரியிடம் விசாரித்தார்.

அதற்கு பூசாரி, “அய்யா. நான் பூஜை செய்யும் கோயில் சாமிகளுக்கு இன்றைக்கு மாசி மகத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இத்தெய்வங்களுக்கு மாசிமகத்தன்று நடைபெறும் திருவிழாதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட திருவிழாவில் சாமிகளுடன் உடனிருந்து அலங்காரம் செய்யவும், பூஜை செய்யவும் என்னால் போக முடியவில்லையே. அதை நினைத்துதான் புலம்புகிறேன். சக்தியுள்ள அந்த சாமிகள் என்னை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச்செல்ல வருவார்கள் என்று நம்பியுள்ளேன்என்றார். அதைக் கேட்ட நீதிபதி, “அவ்வளவு சக்தியுள்ளதா உங்கள் சாமி? அப்படியானால் அந்த சாமிக்கு நான் ஒரு சோதனை வைக்கிறேன். அந்த சாமிக்கு சக்தி இருந்தால் அதைக் கண்டுபிடிக்கட்டும். அப்படி கண்டுபிடித்துவிட்டால் திருவிழா பணிக்கு உன்னை அனுப்பி வைக்கிறேன்என்று சொன்னார். இந்த செய்தி ஊருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அருள்மிகு இராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு

அருள்மிகு இராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு, ஈரோடு மாவட்டம்.

+91-424- 221 4355 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ராகவேந்திரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

கடந்த 17ம் நூற்றாண்டில் பல்லாரி மாவட்டம் ஹோசபேட்டைக்கு அருகில் வாழ்ந்து வந்த திம்மண்ணபட்டர், கோபிகாம்பாள் ஆகியோருக்கு பிறந்தவர்தான் இராகவேந்திரர். இவர் சிறு வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தார். இவர் கும்பகோணத்தை சேர்ந்த ஸ்ரீசுதீந்தரரிடம் சிஷ்யராக அமர்ந்து சகல வித்தைகள் பயின்றார். சுதா பரிமளம் என்ற நூலை இயற்றினார். இவருடைய குடும்ப வாழ்க்கை கஷ்டமாக அமைந்தது. இவருடைய மனைவி மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ராகவேந்திரர் பல இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார். கல்வி அறிவு இல்லாதவனுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும்படியும், தஞ்சாவூரில் ஏற்பட்ட பஞ்சத்தை நிவர்த்தி செய்தும், கருநாகம் தீண்டிய தன் சீடனை உயிர்பித்தும் அற்புத சாதனைகளை செய்தார். முன் காலத்தில் பிரகலாதன் யாகம் செய்த பூமியாக மந்த்ராலயம் இருந்ததை அறிந்த இராகவேந்திரர், அந்த இடத்திலேயே தமது பிருந்தாவனத்தை தாமே நிர்மாணம் செய்து கொள்ள தீர்மானித்தார். அதன்படி 1671ம் ஆண்டு இவர் தன் சிஷ்யர்கள் முன்னிலையில் இந்து எனகே கோவிந்தாஎன்று தொடங்கும் பாடலை இயற்றி, அதை பாடிக் கொண்டும் நாராயணாஎன்ற நாமச்சரணம் செய்து கொண்டும் பிருந்தாவனப் பிரவேசம் செய்து ஜீவ சமாதி அடைந்தார். இதையடுத்து தென் இந்தியா முழுவதும் பிருந்தாவனங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மக்களின் விருப்பத்திற்கு இணங்கி வேத விற்பன்னர் இராமாச்சார் என்பவர் 250 ஆண்டுகளுக்குமுன் ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் சென்று அங்கிருந்து மிருத்திகையை (புனித மண்) தலையில் சுமந்தவாறே, நடந்தே ஊர் ஊராக வந்து, ஈரோடு காவேரி கரையில் சாஸ்திரப்படி சிறிய பிருந்தாவனம் ஸ்தாபித்து கும்பாபிஷேகம் செய்தார்.