Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு சித்தர் திருக்கோயில், தாம்பரம், சென்னை

அருள்மிகு சித்தர் திருக்கோயில், தாம்பரம், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2493 8734 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காமேஸ்வரன்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தாம்பரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆன்மிக உலகத்திற்கு பெரும் ஆர்வம் உண்டு. சென்னை தாம்பரம் அருகேயுள்ள மாடம்பாக்கத்தில் 18 சித்தர்களையும் ஒருசேர வழிபடும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் பச்சைக்கல்லால் அமைக்கப்பட்டுள்ள மகாமேரு மலை சிவசக்தி வடிவமாக கருதப்பட்டு வணங்கப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சித்தரை வழிபடும் முறை உள்ளது. அவர்களுக்குரிய பூக்கள், நைவேத்தியம், வஸ்திரம் கொண்டு வழிபடுவது சிறப்பு.

இத்தலத்தில் பச்சைக்கல்லால் அமைக்கப்பட்டுள்ள மகாமேரு மலை அகிலாண்டேஸ்வரியாகவும், இதிலுள்ள மரப்பலகை காமேஸ்வரன், காமேஸ்வரியாகவும் கருதப்படுகிறது.

அருள்மிகு சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர்

அருள்மிகு சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2478 0436, 93828 89430 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் தரிசிக்க, முன்னரே போனில் தொடர்பு கொண்டு விட்டுச் செல்லலாம்.

மூலவர் சேக்கிழார்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் குன்றத்தூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியை சோழமன்னன் அனபாயன் ஆண்டு வந்தான். அவனது அரசவையில் இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழி இராமதேவர், குலத்தின் பெயரால் சேக்கிழார் என்றழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான். அவருக்கு உத்தமசோழபல்லவர்என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான். திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரின் பக்தராக இருந்த சேக்கிழார், அக்கோயில் அமைப்பிலேயே இவ்வூரிலும் ஒரு கோயில் கட்டினார்.

ஒருசமயம் சிவபக்தனான மன்னன், சமண மதத்தின் மீது நாட்டம் கொண்டு, சமண மத நூல்களை படித்து வந்தான். மன்னனை திருத்த எண்ணிய சேக்கிழார் அவனிடம், சிவன் அடியவர்களுக்கு காட்சி தந்த பெருமைகளைச் சொல்லும் நூல்களை படிக்கும்படி அறிவுறுத்தினார். சேக்கிழாரின் சொல் கேட்ட மன்னன், தனக்கு சிவனின் பெருமைகளை கூறும்படி கேட்டுக்கொண்டார். அவரிடம் சிவனருள் பெற்ற நாயன்மார்களின் வரலாறைக் கூறினார். மன்னன் மிகவும் மகிழ்ந்தான்.