Category Archives: வேலூர்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் போஸ்ட்,காவேரிப்பாக்கம் வாலாஜாபேட்டை தாலுக்கா, வேலூர் மாவட்டம்.

+91 4177 254 929, 94868 77896, 94861 39289

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
உற்சவர்
தாயார் அலர்மேல் மங்கை
தல விருட்சம் வில்வம்,துளசி
தீர்த்தம் புண்டரீக தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நாராயண சதுர்வேதி மங்கலம்
ஊர் திருப்பாற்கடல்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

புண்டரீக மகரிஷி பெருமாள் கோயில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்னும் தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோயிலுக்கு பதிலாக சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது, சிவன் ஒரு முதியவர் வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான், என்றார். ரிஷியோ மறுத்தார். முதியவர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாகப் பிரசன்னமாகி தரிசனம் தந்து,”சிவன் வேறு, விஷ்ணு வேறு கிடையாது; இரண்டும் ஒன்று தான்என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து,”ரிஷியே! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும்என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக, பெருமாள் பிரசன்னமானதால் இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆனார். இவளுடன், அலர்மேலு மங்கை தாயார் அருள் செய்கிறாள்.

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில், பள்ளிகொண்டான்

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில், பள்ளிகொண்டான் – 635 809. வேலூர் மாவட்டம்

+91- 94439 89668, 94436 86869.

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பள்ளி கொண்ட பெருமாள்
தாயார் ரங்கநாயகி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் பள்ளி கொண்டான்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.