Category Archives: வேலூர்
அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில், திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்)
அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில், திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்), வேலூர் – 632 055, வேலூர் மாவட்டம்
*************************************************************************************************************
+0416 227 1855, 227 1202 (மாற்றங்களுக்குட்பட்டவை)
சிதம்பரம் நடராசர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி, பழநி முருகன், புதுச்சேரி மணக்குள விநாயகர், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பல பெரிய கோயில்களில் கருவறை விமானங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களுக்குப் பொற்கோயில் உள்ளது.
பச்சைப்பசேலென்று பரந்து விரிந்த புல்வெளியினூடே கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது ஸ்ரீநாராயணி ஆலயம்.
வேலூர் ஸ்ரீபுரம் “லட்சுமி நாராயணி” கோயில் 5ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது. 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
ஏழுமலையானின் பார்வையில் திருமகள்
வேலூர் மகாலட்சுமி, திருமலையில் அருளும் திருப்பதி வெங்கடாசலபதியின் கடைக்கண் பார்வைபடும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறாள். ஆரம்பகாலத்தில், இப்பகுதி திருமலைக்கோடி என்று அழைக்கப்பட்டது. மகாலட்சுமி கோயில் கட்டியபிறகு “ஸ்ரீபுரம்” என்று பெயர் மாற்றப்பட்டது. “ஸ்ரீ” என்பது மகாலட்சுமியை குறிக்கும். திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிப்பவர்கள், அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணி பீடத்தையும் தரிசிப்பது அவசியம்.
அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், சேண்பாக்கம்
அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், சேண்பாக்கம்– 632008 , வேலூர் மாவட்டம்
+91-416 – 229 0182, 94434 19001 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
தல விருட்சம்: – வன்னிமரம்
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: – சுயம்பாக்கம்
ஊர்: – சேண்பாக்கம்
மாநிலம்: – தமிழ்நாடு
மராட்டிய அமைச்சரான துக்காஜி தனது தேரில் இவ்வழியாக வந்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கிப் பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்புளித்தது. பயந்து போன துக்காஜியிடம் விநாயகரின் அசரீரி தோன்றி, “இவ்விடத்தில் ஏகாதச (11) வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வா,” என்றது. அதன்படி துக்காஜி லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து நிறுவனம் செய்தார். மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் தேர் சக்கரம் ஏறிய வடு இன்னமும் உள்ளது.
இங்கு விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக அருள்பொழிகிறார் .