Category Archives: திருநெல்வேலி
அருள்மிகு வேங்கிடாசலபதி திருக்கோயில், உதயநேரிபாலாமடை
அருள்மிகு வேங்கிடாசலபதி திருக்கோயில், உதயநேரிபாலாமடை, திருநெல்வேலி
நெல்லைச் சீமைக்கு புகழ் சேர்க்கும் பல விஷயங்களில் அங்கு பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி முக்கியமானது. அந்நதியின் சிறப்பைப் பற்றி பல இதிகாச, புராணங்கள் விஷேடமாகக் கூறுகின்றன. அவற்றிலிருந்து தாமிரபரணி நதி தீர்த்தம் மிகவும் பரிசுத்தமானது என்பது தெரிய வருகிறது. தட்சிண கங்கை, பொருநை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது இந்த நதி. கங்கை நதியை விடவும் அதிக புனிதமானது என விஷ்ணு புராணம் கூறுகிறது.
ஒரு சமயம் கங்காதேவி, பகவான் மஹாவிஷ்ணுவிடம் சென்று,”மாந்தர்கள் என்னிடம் வந்து நீராடி தங்களது பாவங்களைப்போக்கிக் கொள்கின்றனர். இவ்வாறு என்னிடம் சேர்ந்துள்ள பாவங்களை நான் எவ்வாறு போக்குவேன்?” என வருத்தத்துடன் கேட்டபோது, மஹாவிஷ்ணு, அவளிடம்,”ஆயிரக்கணக்கான ரிஷிகளும், முனிவர்களும் பலகாலம் தாமிரபரணி நதியின் கரைகளில் கடும் தவம் இருந்து வல்லமை பெற்றுள்ளனர். எனவே, அந்த நதி மிகவும் புனிதமானது. அதில் ஸ்நானம் செய்து உனது பாவங்களை நீக்கிக்கொள்” எனக்கூறினார். கங்கையும் அவ்வாறே செய்து மீண்டும் புனிதம் அடைந்தாள் என விஷ்ணு புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், கோவில்குளம், பிரம்மதேசம்
அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், கோவில்குளம், பிரம்மதேசம் போஸ்ட், அம்பாசமுத்திரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 251 705 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தென்னழகர் (விண்ணகர்பெருமான்) |
உற்சவர் | – | சவுந்தர்ராஜப்பெருமாள் |
தாயார் | – | சவுந்திரவல்லி, சுந்தரவல்லி |
தல விருட்சம் | – | |
தீர்த்தம் | – | மார்க்கண்டேயர் தீர்த்தம் |
ஆகமம்/பூசை | – | வைகானஸம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருப்பொதியில் விண்ணகரம் |
ஊர் | – | கோவில்குளம், அம்பாசமுத்திரம் |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் சென்றபோது இவ்விடத்தில், சுவாமியை தரிசிக்க விரும்பி, பெருமாளை வேண்டினார். சுவாமி, அவருக்கு தாயார்களுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். மனதில் பெருமாளை எண்ணி வணங்கி வந்த அவருக்கு, சுவாமியை சிலாரூபமாக தரிசிக்க வேண்டுமென்று ஆசை உண்டானது. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், மதுரை அருகிலுள்ள கள்ளழகர் கோயில் மலையில் தான் சிலாரூபமாக இருப்பதாகவும், அச்சிலையை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார். அதன்படி பக்தர் சிலையை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். பின்பு, மன்னர் ஒருவரால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.