Category Archives: திருநெல்வேலி
அருள்மிகு பேரா(ற்று)த்து செல்வியம்மன் திருக்கோயில், வண்ணார்பேட்டை
அருள்மிகு பேரா(ற்று)த்து செல்வியம்மன் திருக்கோயில், வண்ணார்பேட்டை-627 003.
**********************************************************************************************
திருநெல்வேலி மாவட்டம்.
காலை 6.30 – 11.30, மாலை 5.30 – 8.30 மணி. செவ்வாய்க்கிழமைகளில் நாள் முழுதும் திறந்திருக்கும்.
மூலவர் | – | பேராத்துசெல்வி |
தீர்த்தம் | – | தாமிரபரணி |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன்பு |
புராணப் பெயர் | – | பேராற்று செல்வி |
ஊர் | – | வண்ணார்பேட்டை |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர், அம்பாளை தன் விருப்ப தெய்வமாக வழிபட்டார். அவருக்கு அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபட வேண்டுமென விருப்பம். ஆனால் கோயில் கட்டுமளவிற்கு அவரிடம் வசதி இல்லை. எனவே, அம்பாள் சிலையாவது பிரதிட்டை செய்ய வேண்டுமென நினைத்தார்.
ஒருநாள் இரவில் அவரது கனவில் அம்பாள் தோன்றினாள். தாமிரபரணி நதிக்கரையில் மூன்று அத்திமரங்கள் ஒன்றாக இருக்கும் இடத்தின் அருகில் ஆழமான பகுதி இருப்பதாக சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் தான் இருப்பதாக கூறினாள். மறுநாள் அவர், அந்த இடத்திற்கு சென்று வலையை வீசினார். அப்போது, அம்பாள் விக்கிரகம் அவருக்கு கிடைத்தது.
நதிக்கரையிலேயே சிறு குடிசை அமைத்து, அம்பாளை பிரதிட்டை செய்து வழிபட்டார். இவள் பெரிய ஆற்றில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், “பேராற்று செல்வி” என்ற பெயரும் பெற்றாள்.
அருள்மிகு உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) திருக்கோயில், திருநெல்வேலி
அருள்மிகு உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) திருக்கோயில், புது
பைபாஸ் ரோடு அருகே திருநெல்வேலி 627 001.
+91 94433 68596, 94431 57065 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – திருநெல்வேலி
மாநிலம்: – தமிழ்நாடு
விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை கட்டித்தழுவி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும். வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, “பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்தவர்‘ என்பர். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை.