Category Archives: திருநெல்வேலி
அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், மேலமாட வீதி, திருநெல்வேலி
அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், மேலமாட வீதி, திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.
+91 98940 20443, 95859 58594
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
நரசிம்மர் |
உற்சவர் |
– |
|
ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசபெருமாள் |
தாயார் |
– |
|
மகாலெட்சுமி |
ஆகமம் |
– |
|
வைகானசம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
மேலமாட வீதி, திருநெல்வேலி |
மாவட்டம் |
– |
|
திருநெல்வேலி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக, பகவான் ஸ்ரீமன் நாராயணன் பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் தனிச்சிறப்பு பெற்றது நரசிம்ம அவதாரம். அசுர குடும்பத்தில் பிறந்தாலும், பக்தியால் தன்னை வளைத்துப் போட்ட ஒரு குழந்தைக்காக உருவானவரே நரசிம்மர். இரண்யன் என்னும் அசுரன், தன்னையே நாட்டு மக்கள் வணங்க வேண்டுமென உத்தரவிட்டான். அவனது மகன் பிரகலாதன், பகவான் நாராயணனின் பக்தனாக விளங்கினான். தந்தை மீது மரியாதை கொண்டாலும் கடவுளாக ஏற்க மறுத்தான். இரண்யன், பெற்ற பிள்ளை என்றும் பாராமல் பலவகையிலும் கொடுமை செய்தான். அவனைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார் திருமால். தவ வலிமை மிக்க இரண்யன் தனக்கு மனிதர், மிருகம், பிற சக்திகளால் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். எனவே திருமால் சிங்க முகமும், மனித உடலும் கொண்ட வித்தியாசமான வடிவில் தோன்றி அவனை அழிக்க முற்பட்டார். “உன் ஹரி எங்கே இருக்கிறான்?” என்று இரண்யன் தன் மகனிடம் கேட்டதும், நரசிம்மரே திகைத்து விட்டார். இந்தச் சிறுவன் நம்மை எங்கே இருக்கிறான் என்று சொல்வானோ என அதிர்ந்து போனவர், உலகிலுள்ள அத்தனை தூசு, துரும்பில் கூட தன்னை வியாபித்துக் கொண்டார். இவ்வாறு, பக்தனுக்காக பதறிப்போய் தன்னை பரப்பிக் கொண்ட திவ்ய அவதாரம் நரசிம்மவதாரம். இறுதியில், பிரகலாதன் ஒரு தூணைக் காட்ட அதைப் பிளந்தான் இரண்யன். உள்ளிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். இரண்யனைத் தன் மடி மீது வைத்து அவனைப் பிளந்தார். அவரது உக்ரத்தைத் தணிக்க லட்சுமி பிராட்டியே பூமிக்கு வந்து பகவானின் மடியில் அமர்ந்தாள். அதுமுதல் அவர் “லட்சுமி நரசிம்மர்” என பெயர் பெற்றார்.
அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில், மருதூர்
அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில், மருதூர், திருநெல்வேலி மாவட்டம்.
காலை 7- 10 மணி வரை, மாலை 5-8 மணி வரையிலும் கிருஷ்ணரை தரிசனம் செய்யலாம்.
மூலவர் |
– |
|
நவநீதகிருஷ்ணன் |
தல விருட்சம் |
– |
|
மருதமரம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
மருதூர் |
மாவட்டம் |
– |
|
திருநெல்வேலி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
கிருஷ்ணன் குழந்தையாக இருந்த போது, அவனது தாய் மருத மரத்தில்தான் உரலில் கட்டி போட்டார். கிருஷ்ணனோ அந்த உரலை இழுக்க மருத மரம் இரண்டு துண்டாகி, அதிலிருந்த தேவர்கள் முக்தியடைந்தார்கள். மருத மரங்கள் இப்பகுதியில் அதிகம் இருப்பதால் இந்த ஊர் மருதூர் ஆனது. மருதமரம் நிற்கும் இடங்களில் கிருஷ்ணன் கோயில் அமைக்க வேண்டும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இந்தக் கோயிலும் அமைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகள் உள்ளன. இவை அனைத்தும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதிகளே. நவதிருப்பதி தரிசனத்துக்காக செல்பவர்கள், மருதூர் நவநீதகிருஷ்ணரையும் தரிசித்து வரலாம்.
கோவிந்தா என சொன்னால் குழந்தை வரம் தரும் கிருஷ்ண சுவாமி, திருநெல்வேலி மாவட்டம் மருதூரில்அருள்பாலிக்கிறார். தாமிரபரணி நதி புனிதமான கங்கைக்கு நிகரானது. இந்நதியின் கரையிலுள்ளது மருதூர் கிராமம். இவ்வூர் அணைக்கட்டின் அருகில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டது நவநீத கிருஷ்ணன் கோயில்.