Category Archives: திருநெல்வேலி
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆய்க்குடி
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆய்க்குடி, திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4633 – 267636 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5.30 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர்) |
|
உற்சவர் | – |
முத்துக்குமாரர் |
|
தலவிருட்சம் | – |
பஞ்சவிருட்சம் |
|
தீர்த்தம் | – |
அனுமன் நதி |
|
ஆகமம் | – |
வைதீகம் |
|
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
ஆய்க்குடி |
|
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு கிழக்கே மல்லிபுரம் எனும் பகுதியில் குளம் ஒன்று இருந்தது. ஒரு சமயம் அக்குளத்தை மக்கள் தூர்வாறியபோது, அதனடியில் பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் அழகிய சுப்பிரமணியர் சிலை ஒன்று கிடைத்தது. அச்சிலையை எடுத்துக்கொண்ட பக்தர் ஒருவர் தமது வீட்டின் பின்புறத்தில் இருந்த ஆட்டுத் தொழுவத்தில் வைத்து பூஜை செய்துவந்தார். ஒர்நாள் அவரது கனவில் தோன்றிய பாலசுப்பிரமணியர், அரசும், வேம்பும் இணைந்திருந்த இடத்தில் தன்னைப் பிரதிஷ்டை செய்து அவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபடும்படி கூறினார். சுப்பிரமணியர் கூறியதைப்போன்ற இடம் தனக்கு தெரியாது என அவர் கூறவே, அவரது தொழுவத்தில் இருக்கும் செம்மறி ஆடு சென்று நிற்கும் இடத்தில் தன்னை பிரதிஷ்டை செய்யும்படி கூறி அருளினார். அதன்படி, இவ்விடத்தில் ஆடு நிற்கவே சிறிய அளவில் பாலசுப்பிரமணியருக்கு ஆலயம் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சைவ, வைணவ ஒற்றுமை கருதி இராமபக்தர்களும் இத்தலத்து முருகனை வணங்க ஆரம்பித்தனர். எனவே இங்குள்ள பாலசுப்பிரமணியர் “ஹரிராமசுப்பிரமணியர்” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள நதிக்கு “அனுமன் நதி” என பெயரிடப்பட்டது.
மூலவர் பாலசுப்பிரமணியர், இடப்புறம் திரும்பிய மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, கணபதி ஆகிய பஞ்ச தேவதையர்கள் குடியிருக்கும் அரசு, வேம்பு, மாவிளக்கு, மாதுளை, கறிவேப்பிலை எனும் பஞ்சவிருட்சங்கள் இக்கோயிலில் உள்ளன. இங்கு இராமர் வந்து சென்றதாக கூறப்படுவதின் அடிப்படையில், மூலவருக்கு வைதீக ஆகமமுறையிலும், உற்சவருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடத்தப்படுகிறது.
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவகிரி
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4636 – 251 015, 99448 70058, 99448 73484 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை,மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
பாலசுப்பிரமணியர் |
|
உற்சவர் | – |
முத்துக்குமாரர் |
|
தீர்த்தம் | – |
சரவணப்பொய்கை |
|
ஆகமம் | – |
காமீகம் |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
சிவகிரி |
|
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்துவிட்டு, தெய்வானையை மணந்து கொள்ள திருப்பரங்குன்றம் திரும்பினார். அப்போது முருகனின் தரிசனம் காண விரும்பிய அகத்தியர் இத்தலத்திலுள்ள குன்றில் தவம் செய்து கொண்டிருந்தார். இவ்வழியே வந்த முருகன், குன்றின் மீது அகத்தியருக்கு காட்சி கொடுத்தார். அவரது வேண்டுதல்படி இங்கேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் இங்கு முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சூரபத்மனை போரிட்டு அழித்த முருகன் இங்கு பால வடிவில் காட்சி தருவதால், “பாலசுப்பிரமணியர்” என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலில் முருகன், தனது ஜடாமுடியையே கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது பாதத்தில் நவக்கிரகங்களின் உருவம் பொறித்த தகடு வைக்கப்பட்டுள்ளது. கிரக தோஷம் நீக்குபவராக இவர் அருளுவதால், இவ்வாறு வைத்துள்ளனர். இத்தகைய அமைப்பில் முருகனைக் காண்பது அரிது. தோஷம் உள்ளவர்கள் அந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில் முருகனை வழிபட தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. திருச்செந்தூர் முறையிலேயே, இங்கு சுவாமிக்கு பூஜை செய்யப்படுகிறது.