Category Archives: காஞ்சிபுரம்

குபேரலிங்கேசுவரர், திருக்கழுக்குன்றம்

அருள்மிகு குபேரலிங்கேசுவரர், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்.

ஆன்மிகச் சிறப்புகளைத் கொண்டு, தெய்வீகப் பொலிவால் தனித்து விளங்கும் திருக்கழுக்குன்றம் ஊர் நுழைவு வாயிலிலேயே மலையைப் பார்த்தவண்ணம் ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

சித்தபுருஷர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம். ஆவுடையார் மேடை பலவகை மருந்துகளால் செய்விக்கப்பட்டது. அந்த மேடையின் மேலே குன்றாத வளம் அருளும் அருள்மிகு குபேரலிங்கேஸ்வரரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

ஒரு காலகட்டத்தில் இத்திருக்கோயில் பூஜைகள் நின்றன. ஆலயமும் சிதிலமடைந்தது. இறைவனின் திருவிளையாடல். ஒரு பிரதோஷ தினத்தன்று, “உனக்கு மட்டும் வீடு கட்டிக்கொண்டு, எனக்கு வீடு கட்டாமல் இருக்கிறாயேஎன்று பக்தர் ஒருவரின் கனவில் அசரீரி ஒன்று தோன்றியது.

கைலாசநாதர் திருக்கோயில், கோவளம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோவளம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44- 2747 2235, 98403 64782

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் கனகவல்லி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் கோவளம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வசித்த கடல் வணிகர்கள் பயணத்தின்போது பாதுகாப்பாக இருக்கவும், தொழில் சிறக்கவும் சிவபெருமானுக்கு ஒரு கோயில் எழுப்பினர். காலப்போக்கில் கடல் சீற்றத்தால் கோயில் மறைந்துவிட்டது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சிவபக்தனான பல்லவ மன்னன், சிவனுக்கு கோயில் எழுப்பும் ஆயத்தப்பணிகளை துவங்கினான். அவனது கனவில் தோன்றிய சிவன், அழிந்து போன கோயிலின் இலிங்கம் ஓரிடத்தில் மறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். மன்னன் இலிங்கத்தைக் கண்டெடுத்து கோயில் எழுப்பி அங்கு பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு கைலாசநாதர் என பெயர் ஏற்பட்டது.