Category Archives: காஞ்சிபுரம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் (கருணாகரப்பெருமாள்) கோயில், திருக்காரகம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் (கருணாகரப்பெருமாள்) கோயில், திருக்காரகம், காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 94435 97107, 98943 88279 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கருணாகரப்பெருமாள் |
தாயார் | – | பத்மாமணி நாச்சியார் |
தீர்த்தம் | – | அக்ராய தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | திருக்காரகம் |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கார்ஹ மகரிஷி என்னும் முனிவர் இந்தப் பெருமாளைக் குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றார். அவர் பெயராலேயே இந்த திவ்ய தேசம் “காரகம்” எனப்பட்டது என்பர்.
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளினார். அப்போதே இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்கார்வனம், திருஊரகம் ஆகிய மூன்று தலங்களும் இந்தக் கோயிலிக்குள் வந்து விட்டதா? அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்தக் காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திரு ஊரகம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திரு ஊரகம், காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்
+91- 94435 97107, 98943 88279 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமப் பெருமாள் |
உற்சவர் | – | பேரகத்தான் |
தாயார் | – | அமுதவல்லி(அம்ருதவல்லி) நாச்சியார், ஆரணவல்லி, |
தீர்த்தம் | – | நாக தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திரு ஊரகம் |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மகாபலி சக்ரவர்த்தி என்பவன் அசுர குலத்தை சேர்ந்தவன். இருந்தாலும் நல்லவன். தான தருமங்களில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது. இதனால் அவனுக்க மிகுந்த கர்வம் ஏற்பட்டது. நல்லவனுக்கு இந்த கர்வம் இருக்ககூடாது என்பதால், பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்கிறார். இதைக்கண்ட மகாபலி,”தாங்களோ குள்ளமானவர். உங்களது காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே” என்றான். அவனது குல குருவான் சுக்கிராச்சாரியார், வந்திருப்பது பகவான் விஷ்ணு என்பதை அறிந்து அவன் செய்ய போகும் தானத்தைத் தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் எல்லாம் வீணாகிவிடும் என்பதால் மூன்றடி நிலம் கொடுக்க சம்மதித்தான்.